வருடம் தோறும் துக்ளக் இதழ் நடத்தும் ஆண்டு விழா வித்தியாசமான ஒன்று... இப்படி ஒரு பத்திரிக்கை 46 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் வாசகர்களை சந்திப்பது ஆச்சர்யமே.,,
பொங்கலை முன்னிட்டு பலர் ஊருக்கு போய் இருப்பார்கள்..இந்த சூழலிலும் பெருந்திரளாக வாசகர் கலந்து கொள்வது விசித்திரம்.. 6.30க்கு நிகழ்ச்சி... மதியம் 2 மணியில் இருந்தே க்யூவில் அமர்ந்து இருக்கிறார்கள்..அப்போதுதான் அரங்கில் சீட் கிடைக்கும்,, சீட் இல்லாதவர்க்ள் இன்னொரு அரங்கில் அமர்ந்து வீடியோ ஒளிபரப்பை பார்க்கலாம்.. கூட்டம் நிரம்பி வழிந்தது,,,
யாரும் மிரட்ட தேவை இல்லாமல் வாசகர்களே ஒழுங்காக வரிசையை பின்பற்றியது அழகு,,,துல்லியமாக 6.30க்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது..
சோ சற்று தளர்ந்து இருந்தாலும் தனக்கே உரிய குசும்பை மறக்கவில்லை
----------------------------------------------------------
சோ -
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.. புத்தாண்டு வாழ்த்துகள்... திகைக்காதீர்கள்... மூன்று மாதம் கழித்து வரப்போகும் புத்தாண்டுக்கு அட்வான்ஸ் வாழ்த்த்துகள் ( பலத்த சிரிப்பு ,...கை தட்டல் ) ..சரத்குமார், எஸ் ஆர் பி , இளங்கோவன் , பொன் ராதாகிருஷ்ணன் , பழ கருப்பையா ஆகியோர் பேச இருக்கின்றனர்,,,,மேடையில் இருப்பவர்கள் ஒருவருடன் ஒருவர் ஒத்துப்போகாதவர்கள்.. நான் யாருடனும் ஒத்துப்போகாதவன்.. ஒத்துப்போகாதவர்களின் நிகழ்ச்சி இது..
முதலில் சமக தலைவர் சரத்குமார் பேசுவார்...
சரத்குமார்
தலைவர்களே...சோ அவர்களே..வாசகர்களே... செல்போன் பிரியர்களே ( கை தட்டல் ) அனைவருக்கும் வணக்கம்.. இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து வரவிருக்கும் புத்தாண்டுக்கு வாழ்த்துகள்.. மன்னிக்கவும்... மூன்று ஆண்டுகள் அல்ல..மூன்று மாதங்கள்...
இது ஒரு வித்தியாசமான மேடை..இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன்..இம்முறை பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இன்றைய அரசியல் என்பதே இன்று கொடுக்கப்பட்ட தலைப்பு... முதலில் நேற்றைய அரசியல் பற்றியும் நாளைய அரசியல் குறித்தும் பேச விரும்புகிறேன்.. அப்போதுதான் இன்றைய அரசியல் குறித்த புரிதல் ஏற்படும்.
நேற்றைய அரசியல் சுதந்திரத்துக்காக பாடுபட்டதில் ஆரம்பிக்கிறது..காந்தி மக்களை வழி நடத்தினார்.. நாடு சட்டங்களால் ஆளப்படக்கூடாது . நல்ல தலைவர்களால் ஆளப்பட வேண்டும்.. அந்த வகையில் சிறப்பான ஆட்சி தந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.. எட்டு பேர் கொண்ட மந்திரிசபையை வைத்துக்கொண்டு பொற்கால ஆட்சி வழங்கினார்...
நாளைய அரசியல் எப்படி இருக்கும்... தங்கத்தட்டு இருக்கும்..சாப்பிட உணவு இருக்காது..இளைஞர்களுக்கு அரசியல் ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது...அரசியல் ஞானம் குறைந்து விட்டது. ஏன் இளைஞர்களுக்கு அரசியல்வாதிகளை பிடிக்கவில்லை..ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டால் அதற்கு ஜாதி மத முத்திரை குத்தி விடுகின்றனர்.. நான் உட்பட யாரும் விதி விலக்கல்ல..
சென்னையில் ஏற்பட்ட பேரிடரின்போது இளைஞர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு தொண்டாற்றினர்..இந்த ஒற்றுமை ஏன் அரசியலில் இல்லை...இது குறித்து விரிவான விவாதம் தேவை...
மோடி வெளி நாடு சென்று விடுவதாக விமர்சனம் இருக்கிறது... இந்தியா என்றால் பாம்பாட்டி , யானை , காலி வயிறுகள் என நினைக்கும் வெளி நாட்டு மன நிலையை மாற்ற பயணம் தேவை.. அவர் இந்தியாவை மார்க்கெடிங் செய்கிறார்...பி ஆர் ஓ வேலை செய்கிறார்...அது மிகவும் வரவேற்கத்தக்கது... தேவையானது..
இலவச திட்டங்களுக்காக ஜெயலலிதாவை விமர்சிக்கிறார்கள்...கொடுக்கப்பட்ட 177 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறார்.லாப்டாப் போன்ற இலவசங்கள் நன்மையைத்தான் செய்து இருக்கிறது..அம்மா உணவங்கள் பலருக்கும் பயனளிக்கிறது
இளைஞர்கள் பெருமளவு அரசியலுக்கு வர வேண்டும்..அரசியல் விழிப்புணர்வு வேண்டும்... இன்னும் ஒரு மாதத்தில் ஒரு விரிவான விவாத அரங்கு நடத்த வேண்டும் என சோ அவர்களை கேட்டுக்கொள்கிறேன்
சோ
ஒரு மாதம் கழித்து விவாதம் நடத்த சொன்னார்... ஒரு மாதம் என்றால் ஒரு வருடம் என பொருள்...அதுதான் ஆரம்பத்திலேயே பூடகமாக சொல்லி விட்டார் ( பலத்த கைதட்டல் ) தமிழ் நாட்டை பொருத்தவரை ஒரு மாதம் செல்வது ஒரு வருடம் போல இருக்கிறது....அவ்வளவு குழப்பங்கள்
அடுத்து எஸ் ஆர் பாலசுப்ரம்ணியன் ( த மா கா )பேசுவார்
எஸ் ஆர் பி
அந்த காலத்தில் கண்ணதாசன் நடத்திய தென்றல் பத்திரிக்கை மூலம் பல கவிஞர்கள் உருவானார்கள்..அவராலேயே அதை தொடர்ந்து நடத்த முடியவில்லை...அது நிறுத்தப்பட்டபோது கதறி அழுதார். ஆனால் சோ இத்தனை ஆண்டுக்ளாக வெற்றிகரமாக துக்ளக்கை நடத்துவது பாராட்டத்தக்கது
இன்றைய அரசியலில் பிராந்திய உணர்வுகள் அதிகரிப்பது ஆபத்தானது... எல்லோரும் ஒற்றுமையாக , சம உரிமையுடன் வாழ வேண்டும்... என்க்கு கோயிலுக்கு போக உரிமை உள்ளதுபோல மசூதிக்கு சர்ச்சுக்கு போகின்றவர்கள் எந்த உறுத்தலும் இல்லாமல் போகின்ற சூழல் வேண்டும்.
திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாடினால் எதிர்க்கிறார்கள்... நான் சுல்தான் பேட்டையை சேர்ந்தவன் என்பதால் திப்பு மேல் ஈடுபாடு உண்டு.. அவரை ஹிந்து விரோதி என்கிறார்கள்... சிருங்கேரி மடம் மராட்டியர்களால் கொள்ளை அடிக்கப்பட்டபோது , மராட்டியர்களுக்கு பதிலடி கொடுத்து செல்வத்தை மீட்டு தருகிறேன்..இல்லையேல் நான் தருகிறேன் என சொன்னவர் திப்பு
வெள்ள நிவாரண பணிகளை அரசு சிறப்பாக செய்தது..ஆனால் செய்ததை சரியாக சொல்லவில்லை
மக்களின் மறதியை சில கட்சிகள் பயன்படுத்தப்பார்க்கின்றன...இப்போது அரசை குறை சொல்லும் கட்சி ஆட்சியில் இருந்தபோது திண்டுக்கல்லில் 1973ல் ஓர் அணை கட்டியது..தப்பான இடம் , தப்பான டிசைன், தரம் குறைந்த பொருட்கள்...
விளைவாக பெரு வெள்ளம்... பலர் இறந்தனர்...ஏராளம் இழப்பு... அப்படி செய்தவர்கள்தான் இன்று அதிகம் பேசுகின்றனர்,,,,மக்கள் இவர்களை நம்பக்கூடாது....
மோடி பாகிஸ்தான் சென்றதை பாராட்டி சில நாட்களில் பதான்கோட் தாக்குதல்... மக்கள் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும்
சோ
திமுக பெயர் சொல்லாமல் திமுகவை விமர்சித்தார்...பெயர் சொல்ல தயக்கம்...காரணம் நாளை என்ன நடக்குமோ..யாருக்கு தெரியும் ( பலத்த கைதட்டல்)
அதேபோல அதிமுகவையும் பெயர் சொல்லவில்லை... பிரயோஜனம் இருக்குமா என்பதில் அவருக்கே குழப்பம் ( கைதட்டல் சிரிப்பு ) மோடி பாகிஸ்தான் பயணம் பயனற்றது என சொல்ல முடியாது...அந்த பயணத்தால்தான் பாகிஸ்தான் சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறது...
கொடுக்கப்பட்ட 15 நிமிடங்களில் 10 நிமிடங்கள் திப்புவைப்பற்றியே பேசி விட்டு போய் விட்டார்... சுல்தான் பேட்டை அவர் ஊர் என்பதால் இருக்கலாம் ( சிரிப்பு , கைதட்டல் )
அடுத்து அன்புமணி பேசுவார்
அன்புமணி உரை
இளங்கோவன் பொன் ராதாகிருஷ்ணன்
ஜெ.யை கோபப்படுத்தி அதிமுகவில் இருந்து வெளியேற காரணமான பழ கருப்பையா பேச்சு
( அன்புமணி , இளங்கோவன் , பழ கருப்பையா பேச்சு....அடுத்த பதிவில் )

அவர் பேசிய சுவையான பேச்சு ஒருபுறம்.பிச்சையவர்கள் அதை எடுத்து எழுதும் விதமும சுவையானதே :)
ReplyDelete