Saturday, April 30, 2016

மதுவிலக்கு - ரிஷி கபூர் கருத்து



தேர்தல் வந்தால் மது விலக்கு பிரச்சாரமும் வந்து விடும்.. ஆனால் யார்  ஆட்சிக்கு வந்தாலும் மது விலக்கு வரப்போவதில்லை..

மது விலக்கு கொண்டு வந்தால் , பக்கத்து மானிலங்களில் சென்று குடிக்கலாம்....  கள்ளச்சாராயம் குடிக்கலாம்.. வெளி நாட்டு சாராயம் குடிக்கலாம்.. இப்படி குடித்து மக்கள் காசு வீணாவதற்கு பதில் அரசே அதை நடத்தி , அந்த காசை மக்களுக்கு பயன்படுத்தலாம் என்பது அரசின் லாஜிக்

ஏன் இப்படி மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகிறீர்கள் என சிலர் கேட்கலாம்.. பிச்சை தேவைப்படும் நிலையில் பலர் இருப்பது மறுக்க முடியாத உண்மை

ஒரு வேளை உணவுக்கு வழி இல்லாமல் இருப்பவர்கள் மட்டும் அல்ல... வேலை தேடுபவர்கள் பலரும் பட்டினியை உணர்ந்திருப்பார்கள்,, அம்மா உணவகம் இவர்களுக்கு பேருதவி...

இதற்கெல்லாம் மது வருவாய்தான் பயன்படுகிறது..

பீகாரில் மது விலக்கு இருக்கிறதே என்கிறார்கள் சிலர்,,,

-------------------------------

இது குறித்து நடிகர் ரிஷி கபூர் சொல்கிறார்

 மதுவிலக்குக்கு எதிராக பேசுவதால் என்னை பீகாருக்குள் நுழைய விட மாட்டோம் என சிலர் சொல்கிறார்கள்.. நான் மீண்டும் சொல்கிறேன்.. நான் மதுவுக்கு ஆதாரவானவன் அல்ல.. ஆனால் இதை எல்லாம் சட்டம் போட்டு தடுக்க இயலாது... இதை அமல் செய்த சில நாட்களிலேயே இது உயிர் பலி வாங்க தொடங்கி விட்டது,, பலர் பக்கத்து மானிலமான உத்தர பிரதேசம் சென்று மது அருந்துகிறார்கள்...
பணக்காரர்கள் வெளி நாட்டு மதுவை அருந்துவார்கள்... ஏழைகள் கள்ளச்சாராயம் அருந்தி உயிர் இழப்பார்கள்
பீகார் தன் தவறை விரைவில் உணரும்

Friday, April 29, 2016

வெற்றிக்கு 21 வழிகள்- பாலகுமாரன் காட்டும் வழி

உன்னால் முடியும் தம்பி வகை புத்தகங்கள் பெரும்பாலும் அரைத்த மாவையே அரைத்து இருக்கும்.

பாலகுமாரன் போன்ற அனுபவமிக்க எழுத்தாளர்கள் இது போன்ற புத்தகங்கள் எழுதிகையில் ஒரு வித்தியாசமான பரிமாணம் கிடைக்கிறது

அந்த வகையில் எழுத்துச்சித்தர் காட்டும் வெற்றிக்கு வழிகளை கொண்ட புத்தகம் இது.

1. காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

காதலை பழகுங்கள்.. காமம் என்பது காதல் இல்லை.... காதல் இன்றி வெற்றி இல்லை

2  உடலை வசப்படுத்துங்கள்

3சோம்பல் அறுத்தல்

சோம்பல் ஒரு நோய்...

4 தொடர்பு கொள்ளும் கலை

5 அறிதலே வாழ்க்கை

6 கர்வம் அழித்தல்

7 தனக்குள் பார்த்தல்

8கோபம் தவிர்த்தல்

9 களவு மறுத்தல்

10 வைராக்கியம் வளர்த்தல்

11 கடுமையாக  உழைத்தல்

12 பொறாமை அகற்றல்

13ஆராவாரம் அகற்றல்

14 பதட்டம் குறைத்தல்

15 காலம் தவறாமை

16 தூக்கத்தின் அவசியம்

17 அவமானம் தாங்க பழகு

18 உடற்பயிற்சி

19தியானம்

20 புத்தகங்கள்

21 தனிமை

என 21 தலைப்புகளில் அழகாக எழுதியுள்ளார் எழுத்துச்சித்தர்

வெறும் அறிவுரைகளாக இல்லாமல்  ஒவ்வொன்றும் சிறுகதை போல இருப்பது சிறப்பு

கூடுதல் போனசாக , பாலகுமாரனின் பிறந்த நாளுக்கு அவர் வீட்டுக்கு ரஜினி வந்த சம்பவம் முன்னுரையில் இடம்பெற்றுள்ளது வெகு அருமை

கண்டிப்பாக படிக்கலாம்

தலைப்பு  - வெற்றி வேண்டுமெனில்

பதிப்பகம் - விசா பப்ளிகேஷன்

 

Wednesday, April 27, 2016

ரகசிய தேர்தல் அறிக்கைகள் - திடுக்கிடும் கண்டுபிடிப்பு


பொதுவான ஃபார்மலான தேர்தல் அறிக்கைகள் பார்த்து ரசித்து விட்டோம்..ஆனால் இதுவரை வெளிவராத சில கட்சிகளின் ரகசிய தேர்தல் அறிக்கைகள் நம் கவனத்துக்கு வந்துள்ளதுன


திமுக
1 பாதகமான தேர்தல் கணிப்புகளை வெளியிடும் ஊடகங்களை ஜாதிப்பெயர் சொல்லி திட்ட வேண்டும்

2. ஜாதி சொல்வதில் பிரச்சனை என்றால் அவர்கள்  நேர்மையை கிண்டல் செய்ய வேண்டும்

3அதுவும் சரிப்படவில்லை என்றால் தேர்தல் கணிப்புகளில் நம்பிக்கை இல்லை என சொல்ல வேண்டும்

4 வாக்களிப்பு நடக்கையில் தேர்தல் கமிஷனை எதற்கும் இருக்கட்டும் என திட்டி வைக்க வேண்டும்

5 தோற்று விட்டால் தேர்தல் கமிஷனை குறை சொல்ல வேண்டும்

6 ஜெயித்து விட்டால் அனைவரையும் பாராட்ட வேண்டும்

அதிமுக

1 மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கும் மணம் உண்டு என்றார் அறிஞர் அண்ணா... அண்ணாயிசத்தில் நடக்கும் நம் கட்சி , திமுகவின் கண்டுபிடிப்பான திருமங்கலம் ஃபார்முலாவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது

2 பேட்டி , பிரச்சாரம் . ,மேடைப்பேச்சு என எதையும் கண்டுகொள்ளாமல் திருமங்கலம் ஃபார்முலாவை மனப்பூர்வமாக ஏற்று செயல்பட  வேண்டும்

3 தோற்று விட்டால் வொட்டிங் மெஷின் மேல் பழி போட வேண்டும்

4 ஜெயித்தால் ஜன நாயகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்

( மற்ற கட்சிகள் அடுத்த பதிவில் )
 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா