தேர்தல் வந்தால் மது விலக்கு பிரச்சாரமும் வந்து விடும்.. ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் மது விலக்கு வரப்போவதில்லை..
மது விலக்கு கொண்டு வந்தால் , பக்கத்து மானிலங்களில் சென்று குடிக்கலாம்.... கள்ளச்சாராயம் குடிக்கலாம்.. வெளி நாட்டு சாராயம் குடிக்கலாம்.. இப்படி குடித்து மக்கள் காசு வீணாவதற்கு பதில் அரசே அதை நடத்தி , அந்த காசை மக்களுக்கு பயன்படுத்தலாம் என்பது அரசின் லாஜிக்
ஏன் இப்படி மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகிறீர்கள் என சிலர் கேட்கலாம்.. பிச்சை தேவைப்படும் நிலையில் பலர் இருப்பது மறுக்க முடியாத உண்மை
ஒரு வேளை உணவுக்கு வழி இல்லாமல் இருப்பவர்கள் மட்டும் அல்ல... வேலை தேடுபவர்கள் பலரும் பட்டினியை உணர்ந்திருப்பார்கள்,, அம்மா உணவகம் இவர்களுக்கு பேருதவி...
இதற்கெல்லாம் மது வருவாய்தான் பயன்படுகிறது..
பீகாரில் மது விலக்கு இருக்கிறதே என்கிறார்கள் சிலர்,,,
-------------------------------
இது குறித்து நடிகர் ரிஷி கபூர் சொல்கிறார்
மதுவிலக்குக்கு எதிராக பேசுவதால் என்னை பீகாருக்குள் நுழைய விட மாட்டோம் என சிலர் சொல்கிறார்கள்.. நான் மீண்டும் சொல்கிறேன்.. நான் மதுவுக்கு ஆதாரவானவன் அல்ல.. ஆனால் இதை எல்லாம் சட்டம் போட்டு தடுக்க இயலாது... இதை அமல் செய்த சில நாட்களிலேயே இது உயிர் பலி வாங்க தொடங்கி விட்டது,, பலர் பக்கத்து மானிலமான உத்தர பிரதேசம் சென்று மது அருந்துகிறார்கள்...
பணக்காரர்கள் வெளி நாட்டு மதுவை அருந்துவார்கள்... ஏழைகள் கள்ளச்சாராயம் அருந்தி உயிர் இழப்பார்கள்
பீகார் தன் தவறை விரைவில் உணரும்
சிந்திக்க வேண்டும் அரசு[[[
ReplyDelete