படிப்பு என்பது நல்ல விஷ்யம்.. ஆனால் படித்து விட்டால் மட்டுமே அது விழிப்புணர்வை தந்து விடாது... ஆன்மீகம் தேவை இல்லை.. அறிவியல் போதும் என பலர் நினைப்பதுண்டு
தற்போது நடக்கும் கொடூரங்களை பார்க்கையில் , எஞ்சினியரிங் மெடிக்கல் ஐ டி போன்ற படிப்புகள் படித்தவர்கள்தான் கொடூரங்களில் தலை சிறந்து விளங்குகின்றனர்
உயிரின் மதிப்பு , பிறரின் உணர்வுகள் பலருக்கு புரிவதில்லை
ஒண்ணாங்கிளாஸ் படிப்பில் இருந்தே தாவர் வளர்ப்பு , மிருகங்கள் வளர்ப்பு போன்றவற்றை ஒரு கட்டாய பாடமாக்கினால் நன்றாக இருக்கு என் நினைக்கிறேன்
பிராக்டிக்கலாக இந்த பாடம் இருக்க வேண்டும்.. தனக்கு பிடித்த ஒரு தாவரம் ஒரு மிருகத்தை வகுப்பின் முதல் நாள் தேர்வு செய்து அவற்றை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும்
ஓர் ஆண்டின் முடிவில் அதன் வளர்ச்சியின் அடிப்படையில் மதிப்பெண்
விதை செடியாக துளிர் விடும் அந்த பசுமை கணம் , நோய் தாக்காமல் அதை காப்பாற்ற தேவைப்படும் அக்கறை , பெரிய மிருகமாக நாம் காணும் எருமை போன்றவை கன்றுக்குட்டியாக இருப்பதை அருகில் இருந்து கண்டு வளர்க்கும் அனுபவம் , அவை நம்மை அடையாளம் காணும் அழகு என ரசித்து பழகி விட்டால் , சக உயிரின் அற்புதம் புரியும்.
காதல் என்பது நேசித்தல் , ஆக்ரம்பிப்போ வன்முறையோ அல்ல என புரியும்
இதுதான் ஆன்மிகம்
க