Pages

Saturday, July 9, 2016

அறிவியல் வேண்டாம்.. ஆன்மிகம் வேண்டும்


படிப்பு என்பது நல்ல விஷ்யம்.. ஆனால் படித்து விட்டால் மட்டுமே அது விழிப்புணர்வை தந்து விடாது... ஆன்மீகம் தேவை இல்லை.. அறிவியல் போதும் என பலர் நினைப்பதுண்டு

தற்போது நடக்கும் கொடூரங்களை பார்க்கையில் , எஞ்சினியரிங்  மெடிக்கல்  ஐ டி போன்ற  படிப்புகள் படித்தவர்கள்தான் கொடூரங்களில் தலை சிறந்து விளங்குகின்றனர்

உயிரின் மதிப்பு , பிறரின் உணர்வுகள் பலருக்கு புரிவதில்லை

ஒண்ணாங்கிளாஸ் படிப்பில் இருந்தே தாவர் வளர்ப்பு , மிருகங்கள் வளர்ப்பு போன்றவற்றை ஒரு கட்டாய பாடமாக்கினால் நன்றாக இருக்கு  என் நினைக்கிறேன்

பிராக்டிக்கலாக இந்த பாடம் இருக்க வேண்டும்..  தனக்கு பிடித்த ஒரு தாவரம் ஒரு மிருகத்தை வகுப்பின் முதல் நாள் தேர்வு செய்து அவற்றை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும்

ஓர் ஆண்டின் முடிவில் அதன் வளர்ச்சியின் அடிப்படையில் மதிப்பெண்

விதை செடியாக துளிர் விடும் அந்த பசுமை கணம் , நோய் தாக்காமல் அதை காப்பாற்ற தேவைப்படும் அக்கறை , பெரிய மிருகமாக நாம் காணும் எருமை போன்றவை கன்றுக்குட்டியாக இருப்பதை அருகில் இருந்து கண்டு வளர்க்கும் அனுபவம் , அவை நம்மை அடையாளம் காணும் அழகு என ரசித்து பழகி விட்டால் , சக உயிரின் அற்புதம் புரியும்.

காதல் என்பது நேசித்தல் , ஆக்ரம்பிப்போ வன்முறையோ அல்ல என புரியும்
இதுதான் ஆன்மிகம்



Tuesday, July 5, 2016

தவளையின் சங்கீதம்

மன அமைதிக்காக தியானம் செய்கிறேன் என்றான் சீடன்.. அட கேப் வெண்டை... அமைதியின்மைதான் மனதின் இயல்பு..அதை ஒரு போதும் அமைதியாக்க முடியாது... மனமே இல்லாமல் ஆகும் நிலை என்பது வேறு.. நீ எந்த அளவுக்கு தியானம் செய்ய முயல்கிறாயோ அந்த அளவுக்கு மனம் மென்மேலும் செழித்து வளரும்.. அது இல்லாமல் போகாது என்றார் குரு.
சீடன் கேட்கவில்லை... தியானம் , மூச்சுப்பயிற்சி என தொடர்ந்தான்.
ஓர் அதிகாலை... இனிய காற்று, பறவைகள் சங்கீதம் என லயித்தபடி கண்மூடி அமர்ந்தவாறு தியானம் செய்வதாக நினைத்துக்கொண்டிருந்தவன் ஏதோ சப்தம் கேட்டு கண் விழித்தான்
குரு ஒரு செங்கலை தரையில் தேய்த்துக்கொண்டிருந்தார்
யோவ் குரு நாதா... என்ன செய்கிறீர் என் கத்தினான் சீடன்
செங்கலை தரையில் தேய்த்து கண்ணாடியாக்கப்போகிறேன் என்றார் குரு
உம்மை ஒரு கேப் வெண்டை என ரொம்ப நாள் சந்தேகப்பட்டேன்... அது உண்மையாகி விட்டது.. என்னதான் முயன்றாலும் செங்கல் செங்கலாகத்தான் இருக்கும்.. கண்ணாடி ஆகாது என்றான்
ரொம்ப நாள் கழித்து இப்பதான் அறிவுப்பூர்வமாக பேசுகிறாய்... எதுவும் தன் இயல்புப்படிதான் இருக்கும்... தியானம் செய்வதன் மூலம் மனம் இல்லாமல் போகாது என சொல்லி விட்டு செங்கலை பக்கத்தில் இருந்த குளத்தில் வீசினார்.
தியானம் செய்து செய்து மழுங்கிப்போய் இருந்த சீடன் முதல் முறையாக விழிப்புடன் அந்த சத்தத்தை கேட்டான்.. மனம் அங்கே அழிந்தது
----
பழங்கால குளம்
குதிக்கிறது தவளை
அந்த சப்தம்