Sunday, September 11, 2016

புல்லாய் பிறந்தாலும்...


ஓர் இசைக்கச்சேரியில் இந்த பாடலை கேட்டேன்.. வெகு இனிமை




புல்லாய் பிறந்தாலும் மிருகாதி ஜனனங்கள்
பசியாறி மகிழும் அன்றோ
பூண்டாய் பிறந்தாலும் புலத்தியர்கள் கொண்டு சில
பிணி தீர்த்து கொள்வர் அன்றோ

கல்லாய் பிறந்தாலும் நல்லவர்கள் மிதி கொண்டு
காட்சிக் குருத்துமன்றோ
கழுதை உருவந்தாலும் ஆவெனக் கத்தினால்
கை கண்ட சகுனம் என்பார்

எல்லாம் இலாமலே இப்பிறவி தந்து என்னை
ஏங்கவிட்ட கல நின்றாய்

எத்தனை அன்னை பின் எத்தனை தந்தை
பின் எத்தனை பிறவி வருமோ
அல்லல் எனும் மாசு அறுத்து ஆட்கொளும் தெய்வமே
அப்பனே தில்லை நகர் வாழ்
அதிபதி ஜனகாதி துதி பதி சிவகாமி
அன்பில் உரை நடனபதியே

Sunday, September 4, 2016

அசோகமித்ரனின் பார்வை சிறுகதை - என் பார்வையில்


அன்றாடம் காணும் நிகழ்ச்சிகளைக்கூட மிக சிறப்பாக கதை ஆக்குபவர் அசோகமித்ரன்.. ஒரு வரியில் ஓர் அழகான சித்திரத்தை படைத்து விடுவார்....அவர் கதைகளில் எல்லாமே சிறப்பானவை என்றாலும் பார்வை எனும் சிறுகதை எனக்கு மிகவும் பிடிக்கும்..காரணம் இதன் எளிமைத்தன்மை.. இதன் உள்ளடக்கம்..

ஒரு பெண் சோப் பொடி விற்க வருகிறாள். பேச்சு வாக்கில் தன் சுயசரிதையை - ஏன் மதம் மாறினோம் என்பதை- சொல்கிறாள்.. அதன் பின் போய் விடுகிறாள்.. இதுதான் ” கதை சுருக்கம் “ ஆனால் கதை இந்த சுருக்கத்துள் சுருங்கி விடாமல் வானளவு விரிகிறது..

கதையின் ஆரம்பத்தில் அந்த பெண் அந்த வீட்டுக்குள் கதவை திறந்து வருகிறாள்..அந்த வீட்டுப்பையன் கதவை திறந்து வீட்டை விட்டு கிளம்புகிறான்.

இந்த இரண்டு வரிகளில் அந்த பெண்ணின் கேரக்டர் , அவள் குடும்ப பின்னணி. இந்த வீட்டின் தோற்றம் , இந்த வீட்டின் பொருளாதார நிலை , வீட்டினரின் மனப்போக்கு என பல விஷயங்கள் நமக்கு தெரிந்து விடுகின்றன.. அதுதான் அசோகமித்திரன்.

சோப்பு பொடி விற்பவள் என்பதால் அதைப்பற்றி சொல்கிறாள்.. ஆனால் வீட்டுக்கார பெண்ணுக்கோ பொதுவான விஷ்யங்கள் பேசவும் ஆசை. அந்த பெண்ணைப்பற்றி கேட்கவே அவள் பதில் சொல்கிறாள்.. பேச்சு வாக்கில் தன் குடும்பம் கிறிஸ்துவர்களாக மதம் மாறியதை சொல்கிறாள்... அதற்கான காரணத்தையும் சொல்கிறாள்.. அவள் தங்கைக்கு கண் பார்வை போய் விட்டது... இயேசுவை கும்பிட்டு சரியாகி விட்டது.

இன்னும் கொஞ்சம் பேசி விட்டு , ஒரு டெமோ காண்பித்து விட்டு அவள் கிளம்பிப்போகிறாள்... அவள் எப்படி வந்தாளோ அதேபோல கதவை ஓசையின்றி அடைத்து விட்டு செல்கிறாள்..

    எப்படி அந்த தங்கையின் பார்வை குடும்பத்தை மாற்றியதோ அதே போல ஆரம்பத்தில் அவள் மீது ஈடுபாடு இல்லாத பார்வை கொண்ட வீட்டுக்காரரின் பார்வை அவளைப்பற்றி தெரிந்ததும் மாறுகிறது என்பதை மறைந்து வருகிறது...ஆனால் அந்த பெண்ணை பொருத்தவரை அவள் பார்வை வேலையின்மீது மட்டுமே இருக்கிறது.. சகஜமாக பேசினாலும் அவள் பார்வை மாறவில்லை என்பதை அழகாக காட்டி இருப்பார்.. டெமோ பொடியை நான் பக்கத்து வீடுகளில் கொடுக்கிறேன் என்ற உதவி கிடைக்கிறது.அதாவது ஒரு தரப்பு பார்வை மாறி விட்டது. ஆனால் அவள் பார்வை மாறவில்லை/

    அவள் பார்வை என்பது குடும்பம் , வேலை என்பது..ஆனால் வீட்டுக்காரரின் பார்வை என்பது பொழுது போக்கு , அடுத்தவர் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் போன்றவை..

அவள் ஓசைப்படாமல் கதவை திறந்து வந்ததற்கும் , அந்த பையன் சத்தத்துடன் திறந்து போனதற்கான ஒப்பீடு நம் மனதில் தோன்றுகிறது. அதேபோல , வீட்டுக்காரரின் பெண்ணுக்கும் இவளுக்குமான ஒப்பீடும் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.. இத்தனைக்கும் அந்த பெண் நேரடியாக கதையில் வருவதில்லை..குரல் மட்டுமே... இப்படி நாமும் கதையில் பங்கேற்று நம் பார்வைக்கும் இடம் கிடைக்கிறது.

    சின்ன சின்ன நுணுக்கங்கள் அபாரம்,உதாரணமாக , தான் மதம் மாறியதை அவள் சொல்கையில் , அடடா,, மாறாமல் இருந்திருக்கலாமே என அங்கலாய்க்கிறாள்  வீட்டுக்கார அம்மா..  உண்மையில் அவள் மாறினாலும் மாறாவிட்டாலும் இவளுக்கு ஒன்றும் இல்லை.. சும்மா வம்பிழுத்தல், பேச தூண்டுதல். இவள் கேள்விகளால் அவளுக்கு லேசாக எரிச்சல் வருவதும் பதிவாகி இருக்கிறது.


அசோகமித்ரன் சிறுகதை தொகுப்புகளில் இந்த கதை இருக்கும் தொகுதியாக பார்த்து வாங்கி படியுங்கள்




Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா