விளிம புக்கு அப்பால் என்றொரு சிறுகதை தொகுதியை அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டுள்ளது... அத்தனையும் புதிய தலைமுறைகள் படைத்தவை..
புத்தகத்தின் வடிவமைப்பு ஸ்டைலிஷாக உள்ளது.. கதைகளை வரிசைப் படுததியிருப்பதும் சிறப்பு..
இந்த தொகுதியின் அனைத்து கதைகளும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு.. அவற்றில் நியூஜென் கதையாக நான் கருதுவது கவிதா சொர்ணவல்லிி யின் சிறுகதையை
அழகான ஷார்ட் பில்ம்போல கதை அமைந்துள்ளது. என்ன வகை கதை ..பிரதான பாத்திரங்கள்.. பாத்திரங்களின் தன்மை ஆகியவற்றை வெகு அழகாக ஆசிரியர் கூற்றாக சொல்லாமல் காட்சிப்பூர்மாக சின்ன சின்ன உரையாடல்களில் நினைவோடைகளில் சொல்கிறார்..
பின் நவீனத்துக்கு என ஃபார்முலா கிடையாது... இன்றைய கால கட்டமே பின் நவீனத்துவ கால கட்டம்தான்.. ஆக இன்றைய வாழ்வை ரெப்ரசன்ட் செய்தாலே அது பின் நவீனத்துவமாகி விடும்... கதாபாத்திரத்துக்கு தன் பெயரை வைப்பது , புரியாமல் எழுதுவது ஆகியவை பின் நவீனத்துவ சூத்திரங்கள் அல்ல... அப்படிப்பட்ட அமெச்சூர் வேலைகளை செய்யாமல் வெகு இயல்பான நடையில் எழுதியிருக்கிறார்

ஒரு நல்ல
காதலை சொல்லும் படத்தைப்பார்த்துவிட்டு தன் உணர்வுகளை தன் மகிழ்ச்சியை
பகிர்வதற்கு தகுந்த நபரை தேடிப்பிடித்து கால் செய்கிறாள் ஒரு பெண்...
இதுதான் ஆரம்பம்... இந்த துவக்கத்திலேயே அவளது ரசனை அவள் பகிர்வுக்கு
தகுதியான நபர் அவர்களது உறவு என்பது அழகாக எஸடாப்ளிஷ் ஆகிறது... அவன்
அவள் சொல்வதற்கு கொடுக்கும் எதிர்வினை அவளுக்கு தன் உறவினன் ஒருவனது
நினைவைத்தூண்டுகிறது.
அவன் அவனது காதல் என பயணிக்கும் கதை காதல் எவ்வளவு அழகானது... அழிக்கவே முடியாதது என்ற உணர்வை கொண்டுகிறது... நாம் அழியலாம்... காதல் நம் தந்தையர் வழியாக வெளிப்பட்டிருக்கும்... நம் மூலம் ...நம் சந்ததியினர் மூலம்... என வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.... நாம் என்பது பொருட்டே இல்லை... இன்னும் ஒரு படி மேலே போய் மனிதர் என்பதே கூட பொருட்டில்லை.. ஒரு பாலம்.. ஒரு ஆறு கூட போதும்... காதல் அவற்றின் மூலம் வெளிப்படும் என்ற விஷயம் அழகாக உள்ளுறைந்துள்ளது..
இந்த அழகான காதல் கதையில் உட்கதையாக சாதிக் கொடுமை கதாநாயகியின் நிமிர்வு ஆகியவைவெகு சிறப்பு. சில பக்கங்களில் இத்தனை விஷயங்கள் சாத்தியமாகக்காரணம் காட்சி ரீதியாக கதை சொல்லும் யுக்திதான்....
சாதிக்கொடுமை என்பது இயல்பாக கதையோட்டத்தில் அமையும் கதைகள் மூலம்தான் இவ்விஷயம் மக்களை அடையும்..இல்லையேல் நாமே எழுதி நாமே படிக்கும் புரட்சிக்கதைகளில் சேர்ந்து விடும்..
நல்ல கதை... வாழ்த்துகள் கவிதா...

No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]