ஒவ்வொரு எழுத்தாளர்க்கும் ஒரு பிரத்யேக நடை உண்டு.. அது போல நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடையும் புகழ் பெற்ற ஒன்று
அந்த காலத்தில் கல் தூண் என்று படம் வந்தது,,, மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் சிவாஜி நடித்திருந்தார்
ஒர் காட்சியில் சிவாஜி கம்பீரமாக நடந்து வர வேண்டும், எப்படி நடப்பது என மேஜர் சொல்லிக்கொடுத்தார்..
ஆனால் அது அவருக்கே பிடிக்கவில்லை.. இன்னொரு விதமாக மாற்றினார்.. அதுவும் திருப்தி இல்லை
சிவாஜி சொன்னார் : ரொம்ப கஷ்டப்படாதே... நான் சில டைப்ல நடந்து காட்டுறேன்.. உனக்கு எது புடிக்குதோ அதை செலக்ட் பண்ணு... ஷூட்டிங்ல அதை ஃபாலோ பண்றேன் என சொல்லி விட்டு பத்து விதங்களில் நடந்து காட்டினார் சிவாஜி,, மேஜர் அசந்து போனார்... நடிப்பின் அகராதிக்கு , நடிப்பு சொல்லத்தர முயன்ற தன் அசட்டுத்தனத்தை எண்ணி சிரித்துக்கொண்டார்
என்னதான் நடிகர் திலகம் என பிறர் பாராட்டினாலும் இயக்குனர் சொன்னபடி நடிப்பதுதான் நல்லது என கருத்துடையவர் சிவாஜி
சாதனை என்றொரு படம்.. அதில் சிவாஜிக்கு இயக்குனர் வேடம்... பிரபுவுக்கு நடிப்பு சொல்லித்தருவது போல காட்சி
எப்படி நடப்பது என பிரபுவுக்கு சொல்லித்தருவது போல காட்சி ... நீங்கள் அவருக்கு நடந்து காட்ட வேண்டும் என்றார் இயக்குனர்
இந்த காட்சியை நாளை எடுக்கலாமா என பணிவுடன் கேட்டார் சிவாஜி
ஏன் என வியப்புடன் கேட்டார் இயக்குனர்
பிரபுவுக்கு நடப்பதற்கு சொல்லித்தரும் முன் , முதலில் நான் நடந்து பயிற்சி எடுக்க வேண்டும் என்றார் சிவாஜி
இந்த சிரத்தைதான் சிவாஜி...
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]