எம் எல் ஏக்கள் பதவி நீக்க சர்ச்சை ஓரளவு ஓய்ந்துள்ள நிலையில் இது சார்ந்த ஒரு பழைய சம்பவத்தை நினைவு கூர்வது நம் கடமை
சபா நாயகர்களுக்கு என சில அதிகாரங்கள் உண்டு.. அதில் யாரும் தலையிட முடியாது என முதன் முதலில் சுட்டிக்காட்டி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியவர் பி எச் பாண்டியன் தான்...
எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தின்போது திமுக சார்பில் சட்ட எரிப்பு போராட்டம் நடந்தது
தூக்கு மேடை ஏறத்தயார்,,, போலிசாரின் துப்பாக்கிகளுக்கு அஞ்ச மாட்டோம்.. சிறைச்சாலை எங்களுக்கு பசுஞ்சோலை... சட்டத்தை எரித்தே தீர்வோம் என திமுக முழக்கமிட்டது
தடைகளை மீறி எரிப்போம் என்ற திமுகவின் அறிவிப்பை அதிமுக கண்டு கொள்ளவே இல்லை.. எரித்தால் எரித்துக் கொள்ளுங்கள் என விட்டு விட்டது
பயந்து விட்டார்கள் போலயே என நினைத்தபடி திமுக சட்டமனற உறுப்பினர்கள் சட்டத்தை எரித்தனர்
வெற்றி வெற்றி என சந்தோஷமாக சட்ட எரிப்பு புகைப்படங்களை தமது பத்திரிக்கைகளில் வெளியிட்டு மகிழ்ந்தனர்
ஆனால் அதிமுகவின் அமைதிக்கான காரணம் பிறகுதான் புரிந்தது
சட்டத்தை மதிப்பதாக உறுதி மொழி அளித்து பதவி ஏற்ற சட்ட உறுப்பினர்கள் சட்டத்தை எரித்து , உறுதி மொழியை மீறி விட்டனர்.. எனவே அவர்களை பதவி நீக்கம் செய்கிறேன் என அதிரடியாக அறிவித்தார் சபா நாயகர் பி எச் பாண்டியன்
அதிர்ந்து போனது திமுக... கோர்ட்டுக்கு போவோம் என்றனர்... சபா நாயகர் அதிகாரம் வானளாவியது... நீங்கள் கோர்ட்டுக்குப்போனாலும் சரி,,, பீச்சுக்கு போனாலும் சரி,,, நான் சொன்னால் சொன்னதுதான் என தில் ஆக அறிவித்தார் பி எச் பாண்டியன்
நாங்கள் சட்டத்தை எரிக்கவில்லை.. வெறும் பேப்பரைத்தான் எரித்தோம் திமுக என எவ்வளவோ பணிந்தும் பதவி மீட்டெடுக்க முடியவில்லை
அப்போ இடைத்தேர்தல் நடந்திருக்கும்ல?அதன் முடிவுகள்?
ReplyDeleteஇல்லை,... இடைத்தேர்தல் நடப்பதற்கு முன்பே அந்த அவை கலைக்கப்பட்டு அடுத்த தேர்தல் வந்து விட்டது
ReplyDelete