டெக்னாலஜி வளர்ச்சி என்பது ,மனிதனின் அதிமுக்கிய சாதனைகளுள் ஒன்று.. ஆனால் மனிதனின் இந்த அறிவு , வளர்ச்சிக்கு மட்டும் அல்ல. சக மனித உயிராகிய நியாண்டர்தால் மனிதன் போல பல உயிரிகளின் அழிவுக்கும் காரணமாகி உள்ளது..
எனவே டெக்னாலஜி வளர்ச்சியை கவனமாக கையாள வேண்டும் என்பது நியாயமான எண்ணம்.
ஆனால் நல்ல விஷ்யமான டெக்னாலஜி வளர்ச்சி எப்படி தீமைக்கு காரணமாகிறதோ அதே போல , டெக்னாலஜி வளர்ச்சியில் கவனம் தேவை என்ற நியாயமான எண்ணமும்கூட தீமைக்கு காரணமாகலாம்.. எத்தனையோ நல்ல போராட்டங்கள் திசை மாறி போவதை பார்த்திருக்க்க்றோம் அல்லவா.
நன்மைக்கும் தீமைக்கும் எதிரான போராட்டத்தைத்தான் சினிமாக்களில் பார்த்திருப்போம்.. டெக்னாலஜி வளர்ச்சி என்ற நன்மைக்கும் , அதை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்ற நன்மைக்கும் இடையேயான போராட்டம்தான் 2.0
வழக்கமாக இலக்கியங்களில்தான் இப்படிப்பட்ட அறச்சிக்கல்களை பார்த்திருப்போம்.. முதன் முறையாக சினிமாவில் அறச்சிக்கலை பார்க்கிறோம்
ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நூலிழைதான் வித்தியாசம்.. இபப்டி ஒரு நடு நிலை பார்வையுடன் நூல்கள் படித்திருப்போம்... துரியோதனன் வில்லன் தான்.. ஆனால் யாரோ ஒரு தேரோட்டி மகனுக்கு அரசாட்சி அளித்தபோதோ , என்னதான் பீஷ்மரை சூழ்ச்சியால் வீழ்த்தினீர்கள் என்றாலும் அவருக்கு மரியாதை செய்யும் உரிமை உங்களுக்கு உண்டு என்று அறிவித்தபோதோ அவனை ஒரு ஹீரோவாகத்தான் பார்க்க முடியும்
நன்மையே உருவான ஹீரோ...தீமையே உருவான வில்லன் என்றுதான் சினிமாவில் பார்த்திருக்கிறோம்
ஏதாவது பிரச்சனை செய்தால் , உன் உயிருக்கு சமமான புறாவை கொன்று விடுவேன் என மிரட்டும் ஹீரோவும் அதற்கு கண்கலங்கி அஞ்சும் இளகிய மனம் கொண்ட வில்லனும் ஒரு சராசரி சினிமா ரசிகனுக்கு இதுவே முதல் முறை
வில்லனுக்கு இப்படி ஒரு ஃபிளாஷ்பேக் என்பதும் நாம் பார்த்திராத ஒன்று
படம் எடுக்கப்பட்ட விதம் இந்தியாவுக்கு புதிது..
- பின் வாங்குவது என்பது என் சாஃப்ட்வேரில் கிடையாது
- வாங்கடா செல்ஃபி பிள்ளைங்களா
- நம்பர் ஒன் நம்பர் டூ இதெல்லாம் குழந்தை விளையாட்டு
- பசிக்குதே என்பதற்காக கையை வெட்டி சாப்பிட முடியாது
- குறைந்த பட்சம் பறவைகளுக்கு தண்ணி வைங்க
- மெசேஜ் ஃபார்வார்ட் பண்றது என்பது சமூக சேவை அல்ல
என பல இடங்களில் கைதட்டல்கள்
- வடை போச்சே
- ( போனில் முத்தம் கொடுக்க முற்படும்போது போன் பறந்து விடுகிறது ) இதுதான் ஃபிளையிங் கிஸ்ஸா?
- காதலுக்கு மரியாதை யா?
- நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை
- ( unknowncallar என மெசேஜ் வருவதைப்பார்க்கும் அமைச்சர் ) யாருயா அது உன்னி கிருஷ்ணன்?
இப்படி படம் முழுக்க மெலிதான நகைச்சுவை... ரஜினி , அக்சய் , எமி ஜாக்சன் மட்டும் அல்ல .. மயில்சாமி கலாபவன் சஜான் உட்பட அனைவருமே ஷங்கரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளனர்
அமைச்சர் பாத்திரத்துக்கு கலாபவன் தான் வேண்டும் என ஷங்கர் உறுதியாக இருந்து , அவர் கால்ஷீட்டுக்கு காத்திருந்து அவர் காட்சிகளை எடுத்தார்..
3- டி வெகு வெகு சிறப்பு
படம் முடிந்து 3 டிக்காகவே ஒரு பாடல் காட்சி என்பது நாம் பார்த்திராதது.. அற்புதம்... பாடல், பின்னணி என அனைத்திலுமே ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் இசைப்புயல் .
பட்சிராஜன் என்ற பெயர் முதல் ஆன்மிக விளக்கங்கள் வரை ஜெயமோகனின் இருப்பு தெரிந்து கொண்டே இருக்கிறது/ ..இலக்கியம் சினிமாவுடன் கைகுலுக்குவதால் கிடைக்கும் நன்மைக்கு எடுத்துக்காட்டாக படம் இருக்கிறது
பறவைகளை , இயற்கையை நாம் அழித்துக்கொண்டே சென்றால் , ஒரு கட்டத்தில் இயற்கை கோபம் அடைந்து நம்மை திரும்ப தாக்க ஆரம்பிக்கும் என்பதை வெகு அழகாக குறியீட்டுரீதியாக காட்சிப்படுத்தி இருப்பது இலக்கியத்தரத்துக்கு ஓர் உதாரணம்
வரலாற்றில் இடம் பெறும் படம்..