எந்த தகுதியும் இன்றி யாரும் வாழ்வில் உயர முடியாது... வாழ்வில் வென்றவர்களின் நற்பண்புகளை கவனித்து , அவற்றை நாமும் பின் பற்ற முயல வேண்டும்
கார்ட்டூனிட் மதி பல்வேறு அரசியல் கார்ட்டூன்களுக்காக புகழ் பெற்றவர்.. பல்வேறு பத்திரிக்கைளில் வரைந்தாலும் இவரது துக்ளக் கார்ட்டூன்களுக்கு தனி இடம் உண்டு....
இவர் பல கட்சியினரை கேலி செய்வது போல , இவரையும் அரசியல் தலைவர்கள் கேலி செய்வதுண்டு.. மதி கெட்டவர்.. அறிவற்றவர் என பலர் விமர்சிப்பது வழக்கம்தான்
திமுகவை இவர் சற்று அதிகமாகவே விமர்சித்துள்ளார்
இவரது கார்ட்டூன்களின் தொகுப்பு நூல் திமுக ஆட்சியின் போது வெளியிடப்பட்டது,, நூலை வெளியிட , முதல்வர் கலைஞரை இவர் அழைத்து கடிதம் அனுப்பினார்
நூலை படித்த கலைஞர் பதில் அனுப்பினார்
நூலில் பல்வேறு கட்சிகள் விமர்சிக்கப்பட்டுள்ளன.. அதில் திமுகவும் உண்டு... அதில் வருத்தமில்லை
எங்களை விமர்சித்துள்ள நூலை வெளியிட்டுப் பேசுவதில் ஒரு முதல்வராக எனக்கு எனக்கு பிரச்சனை இல்லை
ஆனால் நூலின் அட்டைப்படத்திலேயே அழகிரி நாடு, ஸ்டாலின் நாடு’ எனக் கிண்டல் செய்யப்பட்டுள்ளது. இதை நான் வெளியிட்டால் எனது கழக உடன்பிறப்புகள், ‘தலைவரே இதை வெளியிடலாமா?’ என வருத்தப்பட வாய்ப்பு உண்டு
இது தர்மசங்கடமான சூழலை உருவாக்கும்... எனவே நூலை வெளியிட முடியாத நிலையில் உள்ளேன் என தன் மறுப்பை தெரித்தார்
நூல் வெளியீட்டு விழா முடிந்த அடுத்த நாள் முரசொலியில், `வசைபாடும் கார்ட்டூனிஸ்ட் மதிக்கு வாழ்த்துகள்' என ஒரு பெரிய தலையங்கம் வடிவில் கட்டுரை எழுதி, பாராட்டி யிருந்தார் ,, அதில் நாசூக்கான கேலிகளும் இருந்தன
தன்னை விமர்சித்த நூலுக்கான வெளியீட்டு விழா அழைப்பை , அவர் மறுக்க எல்லா உரிமையும் உண்டு,,, அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டிய அவசியம்கூட இல்லை.. அவர் இடத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் , அந்த அழைப்பு தன்னை அவமானப்படுத்துவதாக நினைத்து கோபப்பட்டு இருப்பார்
ஆனால் கலைஞரோ தன் மறுப்பை நாகரிகமான சொன்னது மட்டும் அன்றி. இதை நினைவு வைத்து முரசொலியிலும் எழுதி இருக்கிறார்
இவர் போன்ற ஒரு தலைவர் இனி பிறப்பதரிது என எஸ்கேப் ஆகாமல் , அவரது நற்பண்புகளை பிறரும் பின்பற்ற வேண்டும்
என்ன பிக்கு பேஸ்புக்ல ஆளையே காணோம்?
ReplyDelete