சாய் பாபா , காஞ்சிப் பெரியவர் , விசிறி சாமியார் , ஓஷோ , ஜேகே என ஒரே கால கட்டத்தில் பல்வேறு ஆன்மிக ஆளுமைகள் பிரபலமாக இருந்தது ஒரு வரலாற்று அபூர்வம்
இதில் புட்டபர்த்தி சாய் பாபாவும் காஞ்சிப் பெரியவரும் பக்தி மார்க்கத்துக்கு இடம் கொடுத்த வகையில் தனித்து நிற்க கூடியவர்கள்
இருவருமே உயரிய ஆன்மிக தத்துவங்களைப் பேசியவர்கள் .. பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர்கள்
ஆனால் இருவருக்கும் வேறுபாடுகளும் ஏராளம்
தன்னை சன்னியாசியாகவும் மடத்தின் தலைவராகவும் சொல்லிக்கொண்டவர் பெரியவா
ஒரு பாவனைக்காககூட பிற தெய்வங்களை வணங்காமல் , தன்னையே கடவுள் என முன் வைத்தவர் சாய் பாபா
அரசினால் செய்ய முடியாத தண்ணீர் திட்டங்கள் , கல்விப் பணிகள் , மருத்துவ சேவைகள் என ஏராளமான சமூக சேவைகள் செய்தாலும்கூட , அதை எல்லாம் தாண்டி சாய் பாபா தன்னை கடவுளாகவே , அவதாரமாகவே முன் வைத்தார்
பெரியவர் தன்னை கடவுள் என சொல்லா விட்டாலும் , அவரிடமும் தெய்வீக ஆற்றல் வெளிப்பட்டதாக தகவல்கள் உண்டு
எம் எஸ் சுப்புலட்சுமி , ரா கணபதி என இருவரையுமே தெய்வமாக போற்றியவர்களும் ஏராளம்
சரி,, சாய்பாபாவும் மகா பெரியவரும் ஒருவரை ஒருவர் எப்படி மதிப்பிட்டனர்?
தனக்காக எதையும் செய்ய தயாராக இருந்த , தன்னுடனேயே வசிக்க விரும்பிய ரா கணபதியை , இந்து மதத்தின் ஆவணமாக திகழவிருக்கும் “ தெய்வத்தின் குரல் “ நூலை எழுதுவதுதான் முக்கியம்... காஞ்சிப்பெரியவர் கூடவே இருந்து அதை செய்து முடி..என் ஆசிகள் என கூறி காஞ்சிக்கு அனுப்பி வைத்தவர் பாபா;.. அதிகாரபூர்வமாக வெளிப்படையாக காஞ்சிப்பெரியவரின் மேன்மையை சாய் பாபா ஏற்றுக்கொண்டுள்ளார்
ஆனால் காஞ்சிப்பெரியவர் நிலை வேறு... தன் பக்தர்கள் சிலரை சாய் பாபாவிடம் அனுப்பி உங்கள் குரு அவர்தான் என கூறினாலும் , அவை எல்லாம் தனிப்பட்ட கருத்துகளாகவே இருந்தன.. ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக சாய் பாபாவின் மேன்மையை இவர் சொன்னதில்லை
அதற்கு காரணங்கள் உண்டு
பாரம்பர்யத்தை கறாராக கடைபிடிக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவர் மகா பெரியவர். சாய் பாபாவோ அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டிய நிலையில் இருந்தார்... ஜாதி வேற்றுமை , மத வேற்றுமை இன்றி செயல்பட்ட பாபாவை , ஆச்சாரசீலரான பெரியவர் அதிகாரபூர்வமாக ஏற்க இயலாது
அதேபோல அவதாரம் என்பதை தனிப்பட்ட முறையில் பெரியவா ஏற்கலாம்.. ஆனால் அவரது மடத்தலைவர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு எப்படி ஏற்க இயலாது
இது போன்ற காரணங்களால் இருவரும் ஒன்றிணைவது சாத்தியமின்றி போனாலும் இருவரையுமே வணங்கியவர்கள் , இருவருக்குமே நெருக்கமானவர்கள் என இருந்தவர்கள் பலர்
என் பார்வையில் இருவரும் எப்படி ?
மொழி ஆளுமை , சொற் சிலம்பம் , சொற்பொழிவு போன்றவற்றில் பாபாவுக்கு நிகர் பாபாதான்
இந்திய ஞான மரபு , பாரம்பரிய தொடர்ச்சியை நிலை நாட்டுதல் போன்றவற்றில் பெரியவா , பெரியவாதான்
பாபாவிடம் ஜாதி வேற்றுமை கிடையாது... பெரியவரிடம்ஜாதி துவேஷம் இல்லை என்றாலும் ஜாதி வேற்றுமை உண்டு
இருவருமே ஞான விளக்குகள் என்றாலும் அணுகு முறைகளில் மிகப்பெரிய வித்தியாசங்கள் உண்டு
அந்த வித்தியாசங்களையும் மீறி இருவரையும் ரசிப்பவர்களும் உண்டு.. இருவரையுமே வெறுப்பவர்களும் உண்டு
எல்லோருமே ப்ராடுங்கதான்!இறைசக்தி பெற்றவர் என்று இந்த உலகில் எந்த காலத்திலும் எவரும் இருந்ததில்லை!இறைவன் ஒருவனே!
ReplyDelete