கவிதை உலகில் மு மேத்தாவுக்கு என தனி இடம் உண்டு.. புதுக்கவிதைகளுக்கு என தனி இடம் உருவாக்கி கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்
அதே நேரத்தில் அற்புதமான திரை இசை பாடல்களும் தந்தவர்
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ
படிச்சவங்க விடுற பட்டமும்
காகிதம் தான் காகிதம் தான்
படிக்காதவன் விடுற பட்டமும்
காகிதம் தான் காகிதம் தான்
புத்தகம் உள்ளது பையில அங்க
வித்தைகள் உள்ளது கையில இங்க
நான் படிப்பது மனுஷன தாண்டா
கண்ணகி இங்க வந்தா கண்ணடிக்கும் கூட்டமுங்க
மதுரைய எரிச்சவளே மனசு மாற கூடுமுங்க
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
புத்தனும் இப்போ பட்டணம் வந்தா போதை மரத்துல ஏறிக்குவான்
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கல கலவென துள்ளி குதிக்கும் சின்னஞ்சிறு அலையே
என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தன்னால் அடங்கிவிடும்
உங்களைப்போல சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு
என பல அற்புதமான வரிகள் தந்தவர் இவர்
..
--------------------------
இளையராஜாவின் செல்லப்பிள்ளை இவர்,,, அவருடனான சில சுவையான நிகழ்வுகள்
ஆகாய கங்கை படத்தில் இளைய ராஜா இசையில் எழுதினார்..
தேனருவியில் நனைந்திடும் மலரோ,,, என பாடல் ஆரம்பிக்கும்...
அந்த பாடலில் இளையராஜா ஒரு மாற்றம் செய்தார்
நீ நிலவோ... ஏன் தொலைவோ என்பது இவர் எழுதிய வரி,
நீ என்ன நிலவோ... எட்ட முடியா தொலைவில் இருக்கின்றனயே என பொருள் தருகிறது,,, கவித்துவமாக இருக்கிறது... ஒரு கவிதையாக சிறப்பாக இருக்கிறது... ஒரு தனி கவிதை என்றால் மிகச்சிறப்பாக இருக்கும்
ஆனால் இது பாடல்.. அதுவும் பிரிவைப்பற்றிய பாடல்... நிலவின் குணாதிசங்களை விட பிரிவைச் சொல்வதுதான் முக்கியம்
எனவே இதை இப்படி மாற்றினார் ராஜா...
ஏன் தொலைவோ,.... நீ நிலவோ
ஏன் எட்ட முடியாத தொலைவில் இருக்கிறாய்? நீ குளிர் பொருந்திய இனிமையான நிலவு என்பதால் இந்த தொலைவோ,,,
நச் என பொருந்துகிறது அல்லவா
இதே போல இன்னொரு சம்பவம்
சிறையில் மோகன் இருக்கிறார்.. ரேவதி வெளியில் இருந்து பாடுகிறார் ,
நிலவைப்பார்த்தபடி மோகனுக்கும் பொருந்தும்படி பாடுகிறார்
பாடு நிலாவே.. தேன் கவிதை,, பூ மலர என்பது அவர் எழுதிய வரி
இளையராஜா கேட்டார்,.. நல்ல வரிதான்.. ஆனால் சிறையில் இருக்கும் மோகன் இதை எப்படி பாட முடியும்,, அவருக்கு நிலா தெரியாதே
ஒரே ஒரு எழுத்து மாற்றம் இந்த சந்தேகத்தை போக்கியது
இப்படி மாற்றப்பட்டது
பாடும் நிலாவே.. தேன் கவிதை... பூ மலரே
ஹீரோயின் பாடும்போது , பூ மலர்வதற்காக பாடுவாய் நிலவே என்ற அர்த்தம் வருகிறது
ஹீரோ பாடும்போது , ஹீரோயினை நிலவு என்றும் மலர் என்றும் வர்ணிப்பது போல வருகிறது’
தமிழ் அழகு,.. இசை இனிது.... மு மேத்தா இளையராஜா போன்றோரின் திறமை இனிது
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]