இங்க் பேனாவின் இனிமை குறித்து எழுதி இருந்தேன் அல்லவா..,, அதை எழுதும்போது , இன்க் பேனாவெல்லாம் நம் தலைமுறையோடு முடிந்தது என நினைத்தேன்.
ஆனால் அந்த கட்டுரையைப் படித்த பள்ளி மாணவன் ஒருவன் , நல்ல பள்ளிகளில் எல்லாம் இங்க் பேனாவில்தான் எழுதச்சொல்லி பழக்குகிறார்கள் என்ற தகவலைச் சொன்னான்.. அதற்கு காரணம் ஒரே பேனாவில் எழுதினால்தான் கை எழுத்து கன்சிஸ்டெண்ட் ஆக அழகாக இருக்கும்...
என் கை எழுத்து தலை எழுத்த்து போல இருப்பதற்கு காரணம் , அது போன்ற பள்ளிகளில் படிக்காததுதான்,, நான் படித்த அரசுப்பள்ளியில் அது போல கண்டிஷன் போட்டால் பாதிபேர் வர மாட்டார்கள்.. அதனால் , தக்காளி , நீ எப்படியாவது எழுதித்தொலை என தண்ணி தெளித்து விட்டு விட்டனர்,, எழுத்தாணியால் எழுதினாலும் சரி... இங்க் பென் என்றாலும் சரி,, உன் பேனா,,உன் சுதந்திரம்
எது எப்படியோ..., நம்மை விட நம் அடுத்த தலைமுறை சிறப்பான நிலையில் இருப்பது எல்லா உயிர்க்கும் இனிது.. அம்மாணவன் சொன்னது மகிழ்ச்சி அளித்தது
இன்க் பேனாதான் நல்லது என நான் கஷ்டப்பட்டு தெரிந்து கொண்டதை அந்த பள்ளி சுலபமாக சொல்லிக்கொடுத்து விட்டது
இதே போல , ஒவ்வொரு துறையிலும் அனுபவத்தின் சாராம்சங்கள் சுலபமாக கிடைக்கின்றன.. நாம் அதை தெரிந்து கொள்ளாமல் கஷ்டப்பட்டு தெரிந்து கொள்கிறோம்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]