சோவியத் யூனியன் உலக இலக்கியத்துக்கு அளித்த பங்களிப்பு மகத்தானது... ஆனால் சோவியத் யூனியன் மறைவுக்குப் பின் அதன் இலக்கியவாதிகள் பலரை நம் சூழலில் பேசுவதில்லை.. இது வருந்தத்தக்கது...
உலக இலக்கிய சூழலில் இவர்களைப் பேசினாலும் தமிழிலும் பேச வேண்டியது அவசியம்..
எழுத்தாளர் வலண்ட்டின் கிரிகோரியேவிச் ரஸ்புடின் அந்த காலத்தில் வழங்கிய பேட்டி ஒன்று... பேட்டி எடுத்தவர். அலக்சாண்டர் அஃபனஸ்யேவ்
தமிழாக்கம் - பிச்சைக்காரன்
----------------------------------------------
ர்ஸ்புட்டீன் : குழந்தைகள் அவர்களுக்கு உரிய குழந்தைக்கதைகளால் சூழ்ந்திருக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.. அவர்களை ஆன்மாவை பாதுகாக்கவும் வளர்க்கவும் இந்த கதைகள் அவசியம். ”உலக அறிவு ” என்று உரிய வயதுக்கு முன்பே தேவையற்றதை மூளையில் திணித்து பிஞ்சில் பழுத்து வெம்பிப்போவது நல்லதன்று’
பேட்டியாளர் - உலக ஞானம் என்பதில் என்ன தவ்று கிரிகோரியேவிச். உலகத்தை எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறதோ அந்த அளவுக்கு அந்த குழந்தையின் வாழ்க்கையும் அந்த குழ்ந்தை எடுக்கும் முடிவுகளும் சிறப்பாக இருக்கும் என்கிறார்களே
ர -இப்படி நினைப்பதில் மிகப்பெரிய பிழை இருக்கிறது... இந்த சிந்தனையை நான் மறுக்கிறேன். உலகம் , அதன் கொடுமைகள் , தீமைகள் , நன்மை , மனித பிறவியின் நோக்கம் என அனைத்தும் குழந்தைகளுக்கு தெரிய வேண்டும் என நினைத்து பெற்றோர்கள் சின்ன வயதில் இருந்தே குழந்தைகள் மூளையில் பாடங்களை திணிக்கிறார்கள்.. இவற்றால் பயனேதும் இல்லை.. இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள ஒரு வாழ் நாள் முழுக்க தேவைப்படும். குழ்ந்தைப்பருவத்துக்குரிய கற்பனைகள் , கனவுகள் போன்றவற்றுக்கு இடமளிக்க வேண்டும்.. இன்றைய சூழலில் குழ்ந்தைக் கதைகளுக்கு இடமே கொடுப்பதில்லை
குழந்தைகள் கதைகளால் சூழப்பட்டு இருக்க வேண்டும் என்கிறீர்கள்.. நல்லதுதான்.. ஆனால் இப்படி வளரும் குழந்தைகள் உலகை எதிர்கொள்ள தேவையான மனப்பக்குவத்தை பெற்றிருக்குமா?
ர- உண்மையான குழந்தைக்கதை என்றால் அதில் எல்லாமே இருக்கும்.. புத்திகூர்மை , தாய்ப்பற்று , தேச பக்தி , நன்மை தீமைக்கான போராட்டம் , நன்மை வெல்வதன் அவசியம் என எல்லாமே இருக்கும். குழந்தைக்கதைகள் பொழுது போக்கி மகிழ்வூடுதல்ல... இவை கற்பிக்கின்றன... மரியா ரோடியோவ்னா என்று ஒரு கதை சொல்லும் பெண் கிடைத்திரா விட்டால் புஷ்கின் என்றொரு மாபெரும் கவிஞன் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்.
நெறிகளை விழுமியங்களை சொல்லித்தர வேண்டாமா
நன்மை எது தீமை எது என அனைவருக்கும் தெரியும்.. சொல்லித்தர வேண்டிய இல்லை... எழுத்தாளன் என்பவன் சமூகத்தை கண்காணிக்கும் போலிஸ்காரன் அல்லன்
( சம காலப்பிரச்சனைகளில் கருத்து சொல்லாமல் எழுத்தாளன் விலகி இருக்க வேண்டுமா... ஆன்மிக வெற்றியும் உலகியல் வெற்றியும் ஒன்றாக அடையக்கூடியதா... எதை இலக்க்கியம் முன் வைக்க வேண்டும்... அடுத்த பதிவில் பார்ப்போம்)
- தொடரும்

No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]