நமது சித்தர்கள் , நாயன்மார்கள் பாடல்கள் போல கன்னட மொழியில் பாடல்கள் உண்டு.. கச்சேரிகளில் அவ்வப்போது கேட்டிருப்பீர்கள்
குறிப்பாக பசவண்ணாவின் பாடல்கள் வீரியமிக்கவை.. இவர் தீவிர சிவ பக்தர்.. முற்போக்கு சிந்தனைகள் கொண்டவர்.. சாதி ,மத , பால் , மொழி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டவர்..
வெகு சுருக்கமாகவே இவர் பாடல்கள் இருக்கும்.. ஆனால் கருத்தாழம் மிக்கவை
சில சாம்பிள்கள்
----------------
நலம் விசாரிப்பதால் உன்
பணம் பறந்து விடப்போகிறதா என்ன?
அன்பாக ஒருவனை அமரச்சொன்னால்
உன் இல்லம் இடியப்போகிறதா?
தகுந்த பதில் அளிப்பதான் உன்
தலை நொறுங்கப்போகிறதா?
யாருக்கும் எதையும் கொடுக்காவிட்டாலும்
அன்பாக இருப்பதில் என்ன கஷ்டம்?
அன்பற்ற நெஞ்சை இறைவன் ஏற்பது கஷ்டம்
-----------------------
பகட்டான ஆலய்ங்களை
பணக்காரன் கட்டக்கூடும்
ஏழை நான் என் செய்வேன்?
கால்களை தூண்களாக்கி
என் உடலையே கோயிலாக்குவேன்
என் தலை ஆகட்டும் தங்க கோபுரமாய்
என் இறைவா.. நீ அறிவாய்
மண்ணில் நிற்பது அழியும்
மண்ணில் நகர்வது நிலைக்கும்
------------------------------
வீடு ஒன்றைக் கண்டேன்
புழுதி படிந்திருந்தது
களைகளும் குப்பைகளும் சூழ்ந்திருந்தன
உரிமையாளரால் கைவிடப்பட்ட
உயிரற்ற வீடு போல என எண்ணிக்கொண்டேன்
மனிதர்கள் பலரை காண்கிறேன்
உடல் முழுக்க பொய்கள்
மனம் முழுக்க அசுத்தம்
கைவிடப்பட்ட உயிரற்ற உடல்கள் போலும்
-------------------
மண் இன்றி
குடம் இல்லை
பொன் இன்றி
நகை இல்லை
குரு இன்றி
உயர்வில்லை
____________________-
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]