படையப்பா திரைப்படம் வெளி வந்து வரலாறு காணா வெற்றி பெற்றதும் ரஜினிக்கு ஒரு தேக்க நிலை ஏற்பட்டது... அடுத்து என்ன என்ற யோசனை... வெற்றியின் உச்சத்தை பார்த்தாயிற்று... அதற்கு மேல் என்ன செய்வது என்ற நியாயமான யோசனை... வெற்றி என்பது மட்டும் போதாது.. வேறு ஏதோ ஒன்று கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.. இதனால் 1999ல் வெளிவந்த படையப்பாவுக்கு பின் இரண்டு ஆண்டுகள் ரஜினி படம் ஏதும் வரவில்லை..
2000த்துக்கு பின்புதான் அவர் படங்கள் வரலாயின... அந்த படங்கள் படையப்பாவின் வெற்றியை மிஞ்சினவா.. ஓர் அலசல்
----
2002 - பாபா...
சினிமா வரலாற்றில் அதிக பட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.. சினிமா பத்திரிக்கைகள் மட்டும் அல்ல.. அரசியல் , ஆன்மிகம் , கில்மா , குடும்பம் , விளையாட்டு என எந்த பத்திரிக்கையை எடுத்தாலும் அதில் பாபா குறித்து ஏதேனும் செய்தி வந்து விடும்...
ஆனால் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை... ஆனால் பாபா என்ற மகான் குறித்து பரவலாக மக்கள் அறிந்தார்கள்... அப்போதையை எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லையே தவிர இன்றும் பார்க்கும்படி இருக்கிறது... வியாபார ரீதியாக பண இழப்பு ஏற்பட்டு இருக்கலாம்... ஆனால் ரஜினிக்கு பெருமை சேர்க்கும் படம்
2005 - சந்திரமுகி
அவ்வளவுதான் ரஜினி என பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் இருந்தே அவ்வப்போது ஏதாவது பிரச்சனைகளின்போது சிலர் சொல்வதும் ரஜினி மீண்டு எழுவதும் வரலாறு... என்னைப்பத்தி ஆயிரம் பேரு , என்னென்ன சொன்னாங்க.. இப்பென்ன செய்வாங்க.. என ரஜினிக்காக கண்ணதாசன் எழுதி இருப்பார்... அந்த வரலாற்று தருணங்களை பலர் படித்திருப்பார்கள்.. நேரில் அனுபவித்து இருக்க மாட்டார்கள்...
2005ல் வர்லாறு மீண்டும் படைக்கப்பட்டது... ரஜினி அவ்வளவுதான் என்று சொல்லப்பட்ட சூழலில் 2005ல் சந்திரமுகி வெளியானது.. அதே தினத்தன்று கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ்.. விஜயின் சச்சின்.. வெளியாகின.. அஜித்தின் வரலாறு ( காட் ஃபாதர் ) படமும் அதே தினத்தன்று திட்டமிடப்பட்டு பிறகு ஒத்தி வைக்கப்பட்டது
ஆக , ஒரு உச்சகட்ட மோதல் அன்று நிகழ்ந்தது.... ஆனந்த விகடன் விமர்சனத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் , சச்சின் ஆகிய படங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம்தான் சந்திரமுகிக்கு கொடுத்தனர்
ஆனால் மக்கள் சந்திரமுகி படத்துக்குதான் முதல் இடம் கொடுத்தனர்.. முதல் இடம் மட்டும் அல்ல...முதல் மூன்று இடங்களையுமே சந்திரமுகி பெற்றது.. அன்றும் இன்றும் என்றும் ரஜினியே முதலிடம் என நிரூபித்த சந்திரமுகி ரஜினிக்கு பெருமை சேர்த்த படம்
2007 , சிவாஜி
ஜெண்டில்மேன் , இந்தியன் , முதல்வன் உட்பட பல பட்ங்களை ரஜினியை மனதில் வைத்தே ஷ்ங்கர் எழுதினாலும் அந்த காம்பினேஷன் சில காரணங்களால் உருப்பெறவில்லை... சிவாஜி படத்தில் இந்த ஷங்கர- ரஜினி காம்பினேஷன் உருவானது சிவாஜி த பாஸ் என்ற விளம்பரமே அதிரடியாக இருந்தது... ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரஜினி ரசிகர்களுக்கு கொடுத்த வெற்றிப்படம் என்ற வகையில் இது ஒரு முக்கியமான படம்
2008 குசேலன்
ரஜினி கவுரவ வேடத்தில் நடித்த படம் என்றாலும் ரஜினி படம் என்றே அறியப்பட்டது.. எனவே ரஜினி படமாகவும் இல்லாமல் , ரஜினி பொறுப்பேற்கும் குழப்பமான சூழல் உருவானது
ரஜினிக்கு பெருமை சேர்க்காத படம்.. தவிர்த்திருக்கலாம்
2010 எந்திரன்
ஒரு டிரண்ட் செட்டர்... அதிரடி வெற்றியையும் மீறி ஒரு டிரண்ட் செட்டர் என்ற வகையில் பெருமை சேர்க்கும் படம்.. இதன் வெற்றி அடுத்த பாகத்துக்கும் வழி வகுத்தது.. 8 ஆண்டுகள் கழித்து அடுத்த பாகம் வந்தாலும் இந்த படத்தை நினைவு வைத்து ரசிகர்கள் இதன் ரெஃபர்னஸ் காட்சிகளை ரசித்ததே இந்த படத்தின் இமாலய வெற்றிக்கு சான்று
2014 கோச்சடையான்
இனி வெற்றி மட்டும் வேண்டாம்.. புதிதாக முயல்வோம் என நினைத்து அனிமேஷன் டெக்னாலஜியை முயன்ற படம் இது... அந்த முயற்சி சிறப்பாக அமையவில்லை... முயலை குறி வைத்து வெல்வதை விட யானையை குறி வைத்து குறி தவறுவது மேல் என்பதைபோல் நல்ல முயற்சி என்பதில் பெருமைப்படலாம்
2014 லிங்கா
அவசரமாக எடுக்கப்பட்ட படம்... தவிர்த்திருக்க வேண்டிய படம்.. எந்த வகையிலும் பெருமை சேர்க்கவில்லை...
2016 கபாலி
வழக்கமான மசலாக்களில் இருந்து விடுபட்டு ஐரோப்பிய பாணியில் எடுக்கப்பட அழகான படம்.. நல்ல வெற்றி... ஜானி , முள்ளும் மலரும் பட வரிசையில் வைக்கத்தக்க பெருமைப்படத்தக்க படம்
2017 காலா
தேவர் மகன் என்றெல்லாம் ஆதிக்க சாதி பெருமை பேசிய படங்கள் மத்தியில் முதன் முறையாக நம் மண் குறித்த நம் மக்கள் பெருமை பேசிய படம்.. அதுவும் சொந்தப்படம்... என்றென்றும் பெருமையாக சொல்லிக்கொள்ளும் படம்
2018 2.0
வயதாகி விடட்து என்பது மட்டுமே இப்போதெல்லாம் ரஜினி மீது வைக்க்கப்படும் “ குற்றச்சாட்டு “ எல்லோருக்கும் வயதாகும்.. ஓய்வெடுப்பார்கள்..ஆனால் இந்த வயதிலும் இப்படி ஒரு ஹிட்.. அதுவும் உலக அளவில் ஒரு ஹிட்,,,, நம்ப முடியாத ஓர் அற்புதம்
மொத்ததில் நடிப்பு வாழ்வின் இந்த கால கட்டத்தில் தொடர்ந்து நல்ல படங்களையே ( இரண்டு மட்டும் விதிவிலக்குகள்) வெற்றி படங்களையே தந்து வருவதில் ரஜினிக்கு நிகர் ரஜினிதான் என்று தோன்றுகிறது
லிங்காவை கூட ஹாலிவுட் ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளும் பால கணேசன்கள் மத்தியில் நேர்மையாக விமர்சனம் செய்திருக்கின்ரீர்கள்
ReplyDelete