இப்படி ஒரு மெயில் எனக்கு வந்திருந்தது..
அன்புள்ள பிச்சை..
ஒப்பிடுக.... ராஜசேகர் , கே எஸ் ரவிகுமார் , பி வாசு , எஸ் பி முத்துராமன் , சுரேஷ் கிருஷ்ணா , கார்த்திக் சுப்புராஜ்
---------------------------------------------
அனைவருமே சிறந்த ரஜினி பட இயக்குனர்கள்தான்.. கலைப்படம் , திகில் படம் , மசாலா படம் என்ற வகைகள் இருப்பது போல ரஜினி படம் என்றொரு வகை இருக்கிறது... அதில் மேற்கண்ட இயக்குனர்கள் அனைவருமே கில்லாடிகள்தான் என்றாலும் அவரர்களுக்கு என சில தனித்தன்மைகள் உள்ளன
எஸ் பி முத்துராமன்
ரஜினியை உருவாக்கியவர் இவர்... மசாலா படங்கள் மட்டுமன்றி ஸ்ரீ ராகவேந்திரர் உட்பட வித்தியாசமான படங்கள் பல எடுத்தவர்.. ராகவேந்திரர் படமெல்லாம் சினிமா என்பதைக் கடந்து ஆலயங்களில்கூட பார்க்கும் ஆவணப்படம் ஆகி விட்டது..என்றும் அவருக்கு புகழ் சேர்க்கும் படம் அது...
புவனா ஒரு கேள்விக் குறி படத்தில் ரஜினியை ஹீரோ ஆக்கினார்..ஆறிலிருந்து அறுபது வரை , எங்கேயோ கேட்ட குரல் என ரஜினியின் நடிப்பின்மீது நம்பிக்கை வைத்து வித்தியாசமான படங்களைத்தந்தார்
மனிதன், முரட்டுக்காளை , ராஜா சின்ன ராஜா, குரு சிஷ்யன் , அதிசயப் பிறவி என ரஜினி என்றால் நினைவுக்கு வரும் பல படங்களைக் கொடுத்தவர் எஸ் பி எம்..
இவ்வளவு பெரிய இயக்குனரான இவர் , அந்த பந்தா சற்றும் இன்றி , பல பொது நிகழ்ச்சிகளில் ஓர் இளைஞன் போல ஓடியாடி வேலை செய்வதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்,, ஒரு இலக்கிய மேடையை சினிமா செட் போல அழகாக வடிவமைத்து இருந்ததை பார்த்து பிரமித்து இருக்கிறேன்,,
கமல்ஹாசனுக்கும் வேண்டியவர் இவர்... ஒரே கால கட்டத்தில் ரஜினி கமல் என இருவருடன் பணியாற்றிய சாதனைக்குரிய்வர்
அந்த சந்தர்ப்பங்களில் சில நேரங்களில் வாய்தவறி ரஜினியை கமல் என்றும் கமலை ரஜினி என்றும் அழைத்து விடுவாராம்
எப்ப பாரு,, கமல் நினைப்புதானா என ரஜினி கேலி செய்வாராம்
ரஜினிதான் உங்கள் செல்லப்பிள்ளை என கமல் கேலி செய்வாராம்
இது போன்ற பல அனுபவங்களை அவர் பேசிக் கேட்பது தனி அனுபவம்
ராஜசேகர்
அதிரடிப்பட நாயகனாக இருந்த ரஜினியின் நகைச்சுவை நடிப்பை வெளிக்கொணர்ந்தவர் இவர்... தம்பிக்கு எந்த ஊரு படத்தின் பாப்பா போட்ட தாப்பாவை யாரும் மறக்க முடியாது.. இளைஞர்களின் நடிகராக இருந்த ரஜினியை பெண்களிடமும் குழந்தைகளிடமும் கொண்டு சேர்த்தவர் இவர்..,, சத்யராஜின் நடிப்பை சிறப்பாக வெளிக்கொணர்ந்த பெருமையும் இவருக்கு உண்டு ( காக்கிச் சட்டை)
விக்ரம் , காக்கிச்சட்டை என கமலுக்கும் நெருக்கமானவர் என்றாலும் ரஜினியுடன் தான் அதிகம் பணியாற்றி இருக்க்கிறார்.. தர்மதுரை படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட கால கட்டத்தில் இவர் அகால மரணம் அடைந்தது சினிமாவுக்கு பேரிழப்பு
அம்மா.. நீங்க தமிழ் நாட்டுக்கு ராணி மாதிரி,,, நான் தமிழ் நாட்டுக்கே.... சரி வேண்டாம்,,, அதை நானே சொல்லக்கூடாது என அந்த காலத்திலேயே எழுதி கைதட்டல் வாங்கியதை மறக்க முடியாது
பி வாசு
கண்ணா , நான் நினைச்சா உன் இடத்துக்கு... அதாவது தலைவன் என்ற இடத்துக்கு - சுலபமா வந்துற முடியும்.. ஆனால் எனக்கு தேவையும் இல்லை... விருப்பமும் இல்ல... நான் எப்பவுமே வேலைக்காரன் தான் என பஞ்ச் எழுதியவர்,, பணக்காரன் உழைப்பாளி இவற்றை எல்லாம் விட சந்திரமுகி இவர் புகழை என்றும் பேசும்
கே எஸ் ரவிகுமார்
முக்கியமான ஒரு காலகட்டத்தில் முத்து படத்தை இவர் இயக்குகிறார் என்ற செய்தி பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது.,,, ஆனால் எந்த நெருக்கடிகளும் இல்லாமல் வெகு நேர்த்தியாக படம் எடுத்து மாபெரும் வெற்றி ஈட்டினார்.. ரகுமானிடம் வெகு சிறப்பான இசையை வாங்கினார்,, படையப்பாவில் சிவாஜியை பயன் படுத்திய அழகும் மரியாதையும் நெகிழ வைப்பது.. லிங்காவில் சற்று ஏமாற்றி விட்டார்
ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு மனதளவில் நெருக்கமானவர் இவர்
சுரேஷ் கிருஷ்ணா
மேற்சொன்ன அனைவருக்குமே ரஜினியை நீண்ட நாட்கள் தெரியும்... ஆனால் இவர் திடீரென உள்ளே வந்தவர்... வசந்த் இயக்க மறுத்ததால் அண்ணாமலை பொறுப்பை ஏற்றவர்,,, அந்த பொறுப்பை அவர் திறம்பட செய்த விதம் பிரமிக்கத்தக்கது...அவர் உருவாக்கிய டைட்டில் கார்ட் இன்றுவரை நிற்கிறது... பாட்ஷா படம் எல்லாம் வேறு லெவல்... பாபா படமுமேகூட ஒரு டிரண்ட் செட்டர்தான்.... மீண்டும் இவர் இயக்க்கத்தில் ரஜினியை பார்க்கும் ஆவல் பலருக்கும் உண்டு...
கார்த்திக் சுப்புராஜ்
ராஜாதிராஜா , சிவா , ஊர்க்காவலன் , அருணாச்சலம் இயக்குனர்களை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.. ராஜாதிராஜாவெல்லாம் மிகப்பெரிய ஹிட் .. ஆனால் அந்த இயக்குனர் ( ஆர் சுந்தர்ராஜன் ) ஒரே ஒரு ரஜினி படம்தான் எடுத்தார் என்பதால் இதில் சேர்க்கவில்லை
ஆனால் கார்த்திக் சுப்புராஜ் ஒரே ஒரு ரஜினி படம் எடுத்தாலும் , தன் ரத்தம் சதை நரம்பு எல்லாம் ரஜினியிசம் கலந்து இருப்பதை நிரூபித்து விட்டார்...
மேற்சொன்ன அனைத்து படங்களின் சிறப்பம்சத்துடன் , தன் முத்திரையையும் பதித்த இவர் , கண்டிப்பாக மீண்டும் ஒரு படத்தில் ரஜினியுடன் இணைய வேண்டும்
ரஞ்சித , ஷங்கர் , பாலச்சந்தர்