பேட்ட படம் டைட்டில்கள் ஓடத் தொடங்கின.. ரஜினி பெயருக்கு கிடைத்த கைதட்டலுக்கு நிகராக விஜய் சேதுபதி பெயருக்கும் கிடைத்தது.. முதன் முதலில் அவர் திரையில் தோன்றும்போது அவருக்கு கிடைத்த கைதட்டல் ரஜினியை விடவும் விஞ்சி நின்றது.,, ஓர் இயக்குனராக கார்த்திக் சுப்புராஜ் வென்று விட்டார் என்பதை உணர்ந்த கணம் இது., காரணம் பேட்ட படம் ரஜினி ரசிகர்களை தாண்டி அனைவரையுமே திரையரங்கிற்குள் ஈர்த்துள்ளது,,,, அதற்கு காரணம் ரஜினியை முழுமையாக பயன்படுத்தியது மட்டுமல்ல,,, ரஜினியை மட்டுமே நம்பியிராமல் திரைக்கதையை வலுவாக அமைத்திருப்பதே வெற்றிக்கு காரணம்
இந்தெ வெற்றியில் இருந்து பாடம் கற்க பலர் விரும்பவில்லை... சில தோல்விப் படங்களை முன்னுதாரணமாக காட்டி இது போல ஏன் எடுக்கவில்லை என விமர்சிக்கிறார்கள்... தோல்விப்படம் எடுப்பது எப்படி என அவருக்கு பாடம் எடுக்கிறார்கள்.
நமக்கு தோல்வியாளர்கள் குறித்து கவலை இல்லை... ஆனால் வெற்றியை குறித்தும் அதற்குப்பின் இருக்கும் உழைப்பு , அர்ப்பணிப்பு , பேரார்வம் போன்றவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்...
கார்த்திக் சுப்புராஜ் ஒரே நாளில் உருவான அற்புதம் அல்ல... குறும்படங்கள் மூலம் தன்னை பட்டை தீட்டிக்கொண்டவர்...
சில திரையிடல்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.. ரஜினியை இயக்கும் அளவுக்கு பெரிய ஆள் ஆவார் என அப்போதே கணித்தேன் என சொல்ல விரும்பவில்லை...
பீட்சா படம் எனக்கு பிடித்தாலும்கூட அவரை முழுமையாக நான் உணர்ந்தது ஜிகர்தண்டா படத்தில்தான்.. அப்போதுதான் முதல் முறையாக ரஜினியுடன் அவர் இணைவது குறித்து பலருக்குமே ஓர் ஆர்வம் ஏற்பட்டது... அந்த அளவுக்கு நேர்த்தியாக எடுத்திருந்தார்
இப்போது பேட்ட.. ப்ழைய ரஜினியை மீண்டும் பார்க்கிறோம் என பலர் மகிழ்கிறார்கள்
ஆனால் இதுவரை பார்க்காத ரஜினியையும் பல இடங்களில் அற்புதமாக காட்டி இருக்கிறார்.. ஃபேஸ் ஆஃப் , ஜாங்கோ அன்செய்ண்ட் போன்ற படங்களை பார்த்த பல ரஜினி ரசிகர்களுக்கு இந்த கேரக்டர் ரஜினிக்கு செமய்யா சூட் ஆகுமே என நினைத்திருப்பார்கள்... அந்த ஆசையை ஒரு ரசிகனாக நிறைவேற்றி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்
குவெண்டின் டொரண்டினோ ஒரு தமிழ் படத்தை இயக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது பேட்ட
தமிழ் படங்களிலேயே உழன்று கொண்டிருக்கும் நம் விமர்சகர்கள் பலருக்க்கு இந்த நுட்பம் பிடிபடவில்லை...
அவர்கள் பல ஹாலிவுட் படங்களைப் பார்ப்பது உண்மைதான்... ஆனால் அதை தமிழ் ரசிக மனோபாவத்துடன் பார்க்கிறார்கள்
அதனால்தான் பேட்ட படத்தின் முழு வீச்சை பலர் உணரவில்லை
கண்டிப்பாக பேட்ட ஒரு டிட்ரண்ட் செட்டர் என்பதை வரும் ஆண்டுகள் நிரூப்பிக்கும்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]