சாதிக்கொடுமைகள் ஒழிய வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாகும்
ஆனால் இதற்கான மன நிலை யாரிடமும் இல்லை.. பார்ப்பான் ஒழிக என பிராமணர்களை திட்டுதற்கு ஒரு கருவியாக சாதி ஒழிப்பு கோஷத்தை பலர் பயன்படுத்துகிறார்களே ஒழிய , மாற்றம் தம்மிடம் தொடங்க வேண்டும் என உணர்வதில்லை
ஆதிக்க குணம் கொண்ட சில இடைச்சாதியினரின் இந்த பண்பு குறித்து எழுத்தாளர் பொன்னீலன் தரும் ஒரு உதாரணத்தை கவனியுங்கள்...
---------------
தென்னக கிராமம் ஒன்று... பிராமண சமூகத்தை சென்ற ஒரு பெண் இறந்து விடுகிறாள்.. அவளை சுடுகாட்டில் எரிப்பதற்காக கொண்டு வருகிறார்கள்..சடங்குகள் முடிந்ததும் அனைவரும் கிளம்பி விட்டனர்.... தற்செயலாக அங்கு வந்த ஒருவன் , அவள் இறக்கவில்லை என அறிந்து அவளை காப்பாற்றி விடுகிறான்..
ஆனால் அவள் தன் வீட்டுக்கு போக மறுக்கிறாள்...என்னை பேய் என கருதுவார்கள் என்கிறாள்... அவனும் அந்த லாஜிக்கை ஏற்று அவளை மணந்து தன்னுடன் வைத்துக்கொள்கிறான்
மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்
தன் வீட்டுக்கு தன் குழந்தையுடன் செல்ல வேண்டும் என்கிறாள் அவள்... அவனோ , தான் அந்த ஊருக்கு வருவதை ஆதிக்க சாதியினர் விரும்ப மாட்டார்கள் என்கிறான்
ஆனாலும் அவள் வலுக்கட்டாயமாக அவனை அழைத்து செல்கிறாள்
அவள் வீட்டில் அனைவருக்கும் திகைப்பு.. ஆச்சர்யம்.. இறந்தவள் மீண்டும் வந்து விட்டாளே !
மகிழ்ச்சியுடன் பேசி விட்டு செல்கையில் ஆதிக்க சாதிக்காரர்கள் பார்த்து விடுகிறார்கள்...அவனை கொல்ல முயல்கிறார்கள்.. இனி வரக்கூடாது என எச்சரித்து அனுப்பி விடுகின்றனர்
இன்னொரு முறையும் வந்து பிடிபடுகிறான்..
அவனைக்கொல்ல அனுமதி கேட்டு மன்னனுக்கு ஆள் அனுப்புகிறார்கள்
வாதி சார்பில் ஒருவன்... பிரதிவாதி சார்பில் ஒருவன் என இருவர் செல்கின்றனர்
அவனை கொல்ல வேண்டாம் என்கிறான் மன்னன்.. இருவரும் கிளம்பினர்..
குற்றம் சாட்டப்பட்டவனின் ஆள் சற்று கண்ணயர்ந்து விட , ஆதிக்க சாதியினரின் ஆள் முன்னதாக சென்று விடுகிறான்
கொல்வதற்கு மன்னன் அனுமதி அளித்து விட்டதாக பொய் சொல்லி அவனை கொல்ல வைத்து விடுகிறான்
தாமதமாக வந்த அப்பாவியின் நண்பன் கதறி அழுது விட்டு தற்கொலை செய்து கொல்கிறான்
அந்த பெண்ணும் இறந்து விடுகிறாள்
அந்த மூவருக்கும் ஆலயம் கட்டப்படுகிறது
இதுதான் கிரா சொல்லும் கதை
என்னதான் மனுதர்மம் , வர்ணாஸ்ரமம் என பிராமணர்களை திட்டினாலும் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக ஆதிக்க சாதியுனர்தான் பல இடங்களில் ஆணவ கொலை , சாதிக் கொலை என செயல்பட்டு வருகின்றனர்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]