தகவல் தொடர்பு கலை குறித்து ஓர் ஆங்கில் நூல் வாங்கினேன்.. அதன் உள்ளடக்கத்தைப் போல் , அதை சொன்ன விதமும் மனதைக் கவர்ந்தது... ஒரு விஷ்யத்தை எத்தனை பக்கங்களில் வேண்டுமானாலும் சொல்லலாம்..
ஆனால் இரண்டே வரிகளில் ஒரு செய்தி... அருகில் ஒரு கருத்துப்படம்.. அவ்வளவுதான்.. சொல்லும் விஷ்யம் எளிதாக மனதில் பதிகிறது
உதாரணமாக இப்படி ஒரு பாடம்..
ஒரே வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள்... உங்களை ஃபேக் என நினைத்து விடுவார்கள்
இதற்கு கருத்துப்படம்..
ஒரு பேட்ஸ்மேன் டிஃபன்ஸ் ஆடுகிறார்.. வர்ணனையாளர் சூப்பர் என்கிறார்... ஃபோர் அடிக்கிறார்.. அதற்கும் சூப்பர்... சிக்ஸ் அடித்தால் அதற்கும் சூப்பர்
இப்படி செய்தால் அந்த வர்ணனையாளரின் நம்பகத்தன்மையே வெகுவாக பாதிக்கப்படும்
வெற்றிகரமான மனிதர்கள் இப்படி இல்லாமல் மொழியை சிறப்பாக பயன்படுத்துவார்க்ள்
உதார்ணமாக , அண்ணன் மு க அழகிரி பிறந்த நாளுக்கு ரஜினி சொன்ன வாழ்த்து செய்தியை பாருங்கள்.. வாழ்த்துகள் என பொதுவாக சொல்லாமல் வித்தியாசமான வார்த்தைகளை பயன்படுத்தினார்
நீங்கள் ஒரு நேர்மையான, நல்ல மனிதர். அரசியல் காலண்டரில் கடைசிப் பக்கம் என்பது யாருக்குமே கிடையாது. எதிர்காலத்தில் நீங்கள் எழுந்து வருவீர்கள் - ரஜினிகாந்த்
இது அழகிரியை நெகிழ வைத்தது... நடு நிலையாளர்களை ரசிக்க வைத்தது
-------
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]