புத்தக கண்காட்சியில் வழக்கத்தை விட கூட்டம் சற்று குறைவு..இதை ஆரோக்கியமான மாற்றமாகவே பார்க்கிறேன்.. வேடிக்கை பார்க்கும் கூட்டம் குறைவது நல்லதுதான்
அப்படி குறைந்தாலுமேகூட , ஸ்டால்களில் இருக்கும் கூட்டத்தை விட , வெளியே தின்பண்டங்கள் ஸ்டால்களிலும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளிலும் கூட்டம் அதிகம்..
சொற்பொழிவுகளுக்கு என ஒரு கூட்டம் கூடுகிறது... பல சொற்பொழிவுகள் சிறப்பாக இருந்தன,. ஆனாலும் வாக்குகளைப் பிரிப்பது போல , புத்த கூட்டத்தை இப்படி பிரிக்கலாமா என்ற கேள்வியும் எழுந்தது
பல அபூர்வமா ரஷ்ய புத்தகங்கள் ஒரு ஸ்டாலில் கிடைத்தன...ஒரு புத்தகம் 100 ரூபாய் என்றல்ல... 1000 என்றாலும் வாங்க பலர் தயார்தான்,, ஆனாலும் கூட 10 ரூபாய் , 20 ரூபாய், 5 ரூபாய் என விலை வைத்திருந்தனர்..
கொள்கை அடிப்படையில் நடத்தப்படும் பதிப்பகங்களுக்கும் வியாபார ரீதியிலான பதிப்பகங்களுக்கும் இடையேயான வித்தியாசம் இதுதான்
புதியவர்கள் பலர் எழுத்தாளர்களாக ஆகி இருப்பது வரவேற்கத்தக்கது... புது தலைமுறை எழுத்தாளர்கள் பலர் எழுத்துகள் கவர்ந்தன
அதே நேரத்தில் கிளாசிக் எழுத்தாளர்கள் நூல்களைப் பார்க்கையில் எப்படி இத்தனை நாள் படிக்கத்தவறினோம் என்ற எண்ணம் ஏற்பட்டது
குறிப்பாக எம் எஸ் கல்யாண சுந்தரத்தை நான் அறிய நேர்ந்ததை என் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.. பகல் கனவு , இருபது ஆண்டுகள் ஆகிய இரு நாவல்களுமே அருமை... விரிவாக பிறகு எழுதுவேன்
உடல் மொழி என்பது குறித்து இறையன்பு பேசினார்.
பேசும் தலைப்புக்கேற்ப , மேடையின் நடுப்பகுதிக்கு மைக்கை கொண்டு வரச்சொல்லி பேசினார்.. அதற்கான காரணத்தையும் சொன்னார்... அழகு
படித்த புத்தகங்கள் குறித்து பிறகு எழுதுவேன்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]