இணையம் அறிமுகம் ஆன ஆரம்ப காலங்களில் ஈமெயில் என்பது மிகப்பெரிய ஆச்சர்ய்மாக இருந்தது...
ஒரு நொடியில் உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் தகவல் தெரிவிக்கலாம் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி...
ஆனால் என்ன சிக்கல் என்றால் நம் நண்பர்கள் உறவினர்கள் என் யாருக்குமே அப்போது மெயில் ஐ டி இராது... யாருக்கு மெயில் அனுப்புவது என் தெரியாது... யாராவது வெகு சிலர் மட்டுமே மெயில் ஐடி உருவாக்கி இருப்பார்கள்
அவர்களுக்கு மெயில் அனுப்புவோம்.. ஆனால் அப்போது கம்ப்யூட்டர் பரவலாக இல்லை என்பதால் உடனடியாக மெயில் பார்க்க மாட்டார்கள்... ஃபோனும்கூட அதிகம் இல்லை என்பதால் லெட்டர் எழுதி , மெயில் அனுப்பிய விபரத்தை சொல்ல வேண்டும்... அந்த லெட்டர் கிடைத்து விஷ்யம் தெரிந்து அவர்கள் மெயில் பார்த்து நமக்கு பதில் கிடைக்க 10 நாட்கள் ஆகும்
அதன் டெக்னாலஜி வளர்ந்து விட்டது...அனைவரும் தினம் தோறும் அல்ல... ஒவ்வொரு நிமிடமும் மெயில் பார்த்தனர். உடனடியாக பதில் கிடைத்தது
அதன் பின் இன்னும் அதிகமாக டெக்னாலஜி வளர்ந்தது... மீண்டும் பழைய நிலை உருவாகிவிட்டது.. பத்து நாட்கள் கழித்துதான் ரிப்ளை வருகிறது
வாட்சப் போன்ற வசதிகள் வந்து விட்டதால் பலர் மெயில் பார்ப்பதே இல்லை.. மெயில் அனுப்பிவிட்டு லெட்டர் போடும் பழைய கலாச்சாரம் மீண்டும் உருவாகி விட்டது.
ஓகே ,,,,மு மேத்தாவின் கவிதை ஒன்று
முகவரி எழுதிய
‘
அவன் கையெழுத்து சரியில்லை
கடிதம் ஒன்று
அனாதையாகிவிட்டது
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]