தேச பக்தி , மொழி உணர்வு , ஜாதிப்பாசம் , இன உணர்வு என எல்லாமே மனிதன் கற்பனையாக உருவாக்கிய ஒன்று.. இந்த கற்பனைகளால்தான் மனிதன் தன்னை ஒற்றைத்திரளாக திரட்டிக்கொண்டு உலகை ஆள முடிந்தது
இந்த் கற்பனைகள் இல்லாத விலங்குகள் மனிதனை விட வலுவாக இருந்தும் மனிதனிடம் தோற்றன. அவ்வளவு ஏன் , இந்த கற்பனைகள் இல்லாத மற்ற மனித இனங்கள் கூட ஹோமோ செப்பியன்ஸ் என்ற நம் ஆட்களிடம் தோற்று அழிய நேரிட்டது
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தச்சென்ற நம் விமானிக்கு ஆதரவாக நிற்பது நம் கடமை.. பாகிஸ்தான் இதை எப்படி பார்க்கிறது என கவனியுங்கள்.. தேச பக்தி என்பதை எப்படி எல்லாம் கற்பனையாக புனைவுகள் மூலம் உருவாக்குகிறார்கள் என்பது புரியும்
------
பாகிஸ்தான் செய்தி
கொலை செய்ய வந்த எதிரிக்கு பரிவு காட்டிய பாகிஸ்தான்
சட்ட விரோதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நாசகார செயல்கள் செய்ய நினைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் இறங்கியது
இந்திய விமானிக்கு அது என்ன இடம் என தெரியவில்லை... அங்கிருந்த சிறுவர்களிடம் இது என்ன இடம் என கேட்டான்... அவர்கள் அவனிடம் விளையாடும் பொருட்டு , இது இந்தியா என்றான் ,, பாரத மாதா வாழ்க என கோஷமிட்டான் அவன்,, பாகிஸ்தானுக்கே வெற்றி என அவர்கள் கோஷமிட்டனர்.. அந்த வீர முழ்க்கத்தால் பயந்து போய் அவன் ஓடலானான்,, துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் வைத்திருந்த அவன் சிறுவர்களுக்கு பயந்து ஓடினான்,. சிறுவர்கள் துரத்தினர்.. ஆற்று நீரில் மூழ்கி தப்ப முயன்றவனை வெளியே இழுத்துப்போட்டனர்.,, மீண்டும் ஓடத்தொடங்கிவனை கற்கள் வீசி ஓட ஓட துரத்தினர் பாகிஸ்தான் இளம் வீரர்கள்...கோழைபோல ஓடிய அவனை பாகிஸ்தான் ராணுவம் பரிவுடன் காப்பாற்றியது...சிறுவர்களை சமாதானம் சொல்லி அனுப்பி விட்டு , காயங்களுக்கு மருந்தளிதது
----------
பாகிஸ்தான் ராணுவத்தின் சித்தரவதைக்கு உள்ளாகி ஏற்பட்ட காயங்களுக்கு பாகிஸ்தான் தரப்பு சொல்லும் விளக்கம் அது... பாகிஸ்தான் மக்கள் இதையே நம்புவர்... நாம் நமது அரசு சொல்வதை நம்புவோம்,
உண்மை என்பது யாருக்கும் தெரியாது.,, தெரிந்து ஆகப்போவதுப் ஒன்றும் இல்லை....
நாம் வாழ்வது இது போன்ற பொய்களால்தான் என்பதை உணர்ந்தால் போதும்