விஜய் டீவியில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒருவரிடம் உங்களுக்கு எப்படி முடி கொட்டியது என கேட்டார்கள்
- சார்... நான் எப்பவுமே படிச்சிக்கிட்டே இருப்பேன்,,பயங்கர படிப்பாளி... படிச்சு படிச்சு முடி கொட்டிருச்சு என்றார் அவர்
- அப்படியா.. எப்படி என்னதான் படிப்பீங்க ? என ஆச்சர்யத்துடன் கேட்டார் கோபி நாத்
- பொன்னியின் சொல்வன் படிப்பேன் என்றார் அவர்
திகைத்துப்போன கோபி நாத் , சரி., அதை அப்படி வெறித்தனமா படிச்சாலும்கூட , ஒரு வாரத்துல முடிச்சுறலாமே.. என்றார்
- இல்லை சார்.. தினமும் அதை படிப்பேன் என்றார் அவர்
- சரி., அதுல வரும் கேரக்டர் ஏதாச்சும் சொல்லுங்க என கேட்டதும் திகைத்துப்போய் விழித்தார் அவர்
நம் ஆட்களின் படிப்பு அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.. எதையும் சரியாக படிப்பதில்லை
படிக்காதது ஒரு குற்றம் என சொல்வதற்கில்லை... ஆனால் படிக்காமல் அரைகுறையாக எழுதுவது தவறு
இவர்கள் இப்படி அரைகுறையாக முக நூலில் வாட்சப்பில் எழுதுவதை ஆதாரமாக வைத்து அரசியல் தலைவர்களும் மேடையில் பேசி அசிங்கப்படுவதும் நிகழ்கிறது
மாங்கல்யம் தந்துனானே என திருமணத்தில் மந்திரம் சொல்கிறார்கள் ... அதன் பின் வரும் வரிகளின் அர்த்தம் என்ன ?
சோமஹ ப்ரதமோ விவேத
கந்தர்வ விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ
ஒருவன் நித்திரை தேவியின் பிடியில் இருந்தான் என்றால் என்ன அர்த்தம்? நித்திரை தேவி என்று ஒரு பெண் இருக்கிறாள்... அவள் அவனை இழுத்து படுக்கைக்கு அழைக்கிறாள் என்றா அர்த்தம்?
அப்படி பாமரர்களும் பொருள் கொள்ள மாட்டார்கள்.. தூங்கி விட்டான் என்பதை நித்திரை தேவி அவனை ஆட்கொண்டாள் என கவிப்பூர்வமாக சொல்கிறார்கள்
உன் நாவில் சரஸ்வதி தேவி வசிக்கிறாள் என்றால் , அப்படி ஒரு பெண் நம் நாக்கில் வீடு கட்டி வசிக்கிறாள் என்பதல்ல.. அவன் நன்றாக சுவையாக பேசுகிறான் என்பது பொருள்
அதுபோன்ற கவிப்பூர்வமான வரிகள் அவை
பெண்ணே..
நீ நிலவின் குளிர்ச்சியாய் உதித்தாய்
பின்பு கந்தர்வ அழகு உன்னை ஆட்கொண்டது
அதன் பின் பெண்மை நெருப்பு உன்னைப் பற்றியது
இதோ இப்போது உன்னவனை கரம் பற்றுகிறாய்
இதுதான் அந்த வரிகளின் அர்த்தம்
இதைப்புரிந்து கொள்ளாமல் முதல்வர் பகல் கனவில் இருக்கும் சில தலைவர்களே பேசுவது கொடுமை
பெண்ணே
கொஞ்ச நாள் பக்கத்து வீட்டு சந்திரனை கல்யாணம் செய்து வாழ்ந்தாய்
அவனை டைவர்ஸ் செய்து விட்டு , கந்தர்வன் என்ற எதிர் வீட்டானை மணந்தாய்
அக்னிகோஷ் என்ற வட இந்தியனை அடுத்து மணந்தாய்
கடைசியாக இந்த பலியாடு உன்னிடம் சிக்கியுள்ளது... இவனையாவது கண் கலங்காமல் பார்த்துக்கொள் என்றொரு பாமரத்தனமான விளக்கத்தை மேடையிலேயே பேசுகிறார்கள்
அப்படி பேசுபவர்களோ அதை கேட்டு கைதட்டுபவர்களோ இந்த கட்டுரையை படிக்கப்ப்போவதில்லை...திருந்தப்போவதும் இல்லை
உண்மையான அறிவைத்தேடுபவர்களுக்கு இது உதவக்கூடும் என்பதால் இந்த பதிவு
well said
ReplyDeleteGood explanation. Rajan
ReplyDeleteAll these arguments would end if the marriages were mantras are done in their mother tongue so every one can understand the meaning.
ReplyDeleteThis is princely the reason we say no need to have sanskrit in our temples and rituals.
இதுவும் முட்டாள் தனமான விளக்கம்
ReplyDelete