இட ஒதுக்கீடு என்பது நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒன்று,, அதன் நோக்கம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது
ஆனால் சில பொதுப்பிரிவினர் தம் சான்றிதழ்களில் ஃபிராடு செய்து , தம்மை இட ஒதுக்கீட்டின் பலன்களை பெற முயல்வதும் , பிறகு மாட்டிக்கொள்வதும் அவ்வப்போது நடப்பதுதான்
பாக்யராஜ் இங்குதான் ஒரு மாற்று சிந்தனையை பயன்படுத்தி ஒரு கதை எழுதினார்.. வேலையில்லாத ஒருவன் , தன்னை பிராமணன் என காட்டிக்கொண்டு வேலை பெறுவதாக ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத கதை
முடிந்த அளவு பெண்களையும் பிராமணர்களையும் இழிவு படுத்துவது போன்ற கதைப்போக்கு..
கண்டிப்பாக தனக்கு புரட்சியாளன் இமேஜ் கிடைக்கும். படம் ஓடும் என்பதை அவர் சரியாக கணக்கிட்டார்.. ஆனால் பிராமணரக்ளை இப்படி நேரடியாக இழிவு செய்தால் , அவர்கள் கோபத்துக்கு ஆளாவோம் என்ற ஒரு பயம் இருந்தது
எனவே ஒரு பலியாட்டை தேடினார்.. நல்ல சினிமாவுக்கான முயற்சியில் இருந்த பாலகுமாரன் சிக்கினார்.. ஓர் அனுபவத்துக்காக இயக்குனர் முயற்சியில் இருந்த அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதாக பாக்யராஜ் சொன்னதை அப்பாவித்தனமாக நம்பினார் பாலகுமாரன்
ஆனால் உண்மையில் அது ஒரு வாய்ப்பல்ல.. பெயர் மட்டும் பாலகுமாரனுடையது.. அதில் கொட்டப்படும் விஷமெல்லாம் பாக்ராஜை சேர்ந்தது..
படம் ஓடியது..லாபம் அவருக்கு ,, கெட்ட பெயர் பாலகுமாரனுக்கு
சினிமாவின் சூதுவாது தெரியாமல் ஏமாந்தது என் பிழை அல்ல... இந்த தந்திரம் ரொம்ப நாள் வேலை செய்யாது என வயிறு எரிந்து பேட்டி அளித்தார்
அந்த 7 நாட்கள் , தூறல் நின்னு போச்சு , முந்தானை முடிச்சு என வெற்றிகளை குவித்த பாக்யராஜுக்கு , மேற்சொன்ன படம்தான் அவர் வாழ்வின் கடைசி ஹிட் படம்
அதன் பின் வரிசையாக தோல்விகளை சந்தித்து முடங்கினார்
துரோகமும் தந்திரங்களும் தற்காலிக வெற்றியை தரலாம்.. ஆனால் நிரந்தரம் அல்ல
அதுபோல இயக்குனர் பாலாவுக்கு துரோகம் செய்தவர்களை இயற்கை நிதி மன்னிக்கப்போவதில்லை
எப்பேற்பட்ட இயக்குனர்.. அவர் இயக்கம் சரியில்லை என சொல்லி அவமானப்படுத்தியவர்கள் வெல்லப்போவது இல்லை
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]