Tuesday, February 5, 2019

எங்கள் ஊர் - கிவாஜ - நூல் அறிமுகம்


தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானவர்களில் ஒருவர் கிவாஜ.. கலைமகள் ஆசிரியராக இருந்து பலரை தமிழ் எழுத்துலகுக்கு கொ கொணர்ந்தவர் இவர்

ஒரு முறை , இம்மைக்கும் மறுமைக்கும் உரிய வழி என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார்

பேச ஆரம்பிக்கும்போது மைக் தகராறு செய்யவே வேறு மைக் கொணர்ந்தனர்.. அதுவும் வேலை செய்யவில்லை

உடனே சொன்னார் - இம்மைக்கும் சரி இல்லை.. அம்மைக்கும் சரியில்லை

கூட்டத்தில் பயங்கர சிரிப்பொலி

இவர் தலைமை தாங்கிய கூட்டம் ஒன்றில் குமரி அனந்தன்  சிறப்பாக பேசினார்.. உடனே கிவாஜா அவரிடம் கேட்டார்...எங்கிருந்து வருகிறீர்கள்

குமரியார் - வண்ணாரப்பேட்டை

கிவாஜா - வெளுத்துக்கட்டி விட்டீர்கள்

கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆனது


தன் இதழில் , எங்கள் ஊர் என்ற தலைப்பில் சில பிரமுகர்களை எழுத வைத்தார் அவர்.. அதே தலைப்பில் சில வாசகர்களும் தன் எண்ணங்களை பதிவு செய்தனர்

அது நூலாக வெளிவந்துள்ளது  

தி சே சௌ ராஜன் , ஸ்ரீனிவாச ராகவன், ஸ்ரீனிவாச சாஸ்திரி,  ராவ் பகதூர் சுப்ரமணிய முதலியார் , கொணஷ்டை , குமுதினி உள்ளிட்ட பெருந்தலைகள் தம் அனுபவங்களை பகிர்துள்ளனர்

50களில் வெளியான நூல் இது

இதில் எழுதிய பிரமுகர்கள் இன்று நம்மிடையே இல்லை என் முன்னுரையில் சொல்கிறார் கிவாஜ..

அந்த வரி என்னை சிலிர்க்க வைத்தது... காரணம் அதை எழுதிய கிவாஜ வும் இன்று நம்மிடையே இல்லை

ஆனால் அந்த முன்னோடிகளின் எழுத்து  , அவர்களின் தமிழ் உழைப்பால் விளைந்த பயன் இன்றும் நம்மிடையே இருக்கிறது..

ஆக அவர்கள் எல்லாம் மரணம் வென்றவர்கள்

 நாக்பூர் குறித்தும் டெல்லி குறித்தும் வாசகர்கள் எழுதியுள்ள அனுபவ பகிர்வும் சிறப்பு...

அன்றைய ஊர்கள் இன்று மாறி விட்டன.. ஆனால் மாறாத தன்மைகள் சில உள்ளன.. எங்கு சென்றாலும் தனித்து செயல்படும் தமிழன் , லொட லொடவென்ற பேச்சு , உணவில் காட்டும் பிடிவாதம் போன்றவை எப்பவும் மாறுவதில்லை

அந்த கடிதம் எழுதிய வாசக்ர்களும் சாஸ்வத தன்மை பெற்று விட்டதை எண்ணிப்பார்த்தேன்.. இந்த நூல் பிரதியை ஒரு பொக்கிஷம்போல தம் பரம்பரைகளிடம் காட்டி இருக்கக்கூடும்..

பிரமுகர்கள் எழுதியுள்ள ஒவ்வொரு கட்டுரையும் இன்றைக்கும் படிக்கும் தன்மையுடன் அழகான நடையுடன் புனைவுத்தன்மையுடன் இருக்கிறது..அதே நேரத்தில் ஒரு காலகட்டத்தின் ஆவணமாகவும் இருக்கிறது

அமைச்சர் , மருத்துவர் , பேச்சாளர்  , எழுத்தாளர் என்ற கலவையில் இந்த நூல் படைப்பாளிகள் இருந்தாலும் அனைவருக்கும் பொதுவான அம்சம் என்பது தமிழ்...தமிழ் நேசம்

வாய்ப்பு கிடைப்பின் படியுங்கள்

எங்கள் ஊர் - தொகுப்பு கிவாஜ.. ஜெனரல் பப்ளிஷர்ஸ்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா