அண்ணாவால் தன் இதயக்கனி என போற்றப்பட்டவர் எம் ஜி ஆர்
1967ல் திமுக வென்றதும் தனக்கு மாலை அணிவிக்க வந்தவர்களை , எம் ஜி ஆர்தான் இந்த மாலைக்கு உரியவர் என அவரிடம் அனுப்பியவர் அண்ணா
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை தமிழகத்துக்கு தந்த அண்ணா குறித்து எம் ஜி ஆர் பல சர்ந்தர்ப்பங்களில் பேசி இருக்கிறார்... அதில் ஒன்று இது
------------
உங்களை சிலர் அவதூறாக பேசும்போது என்ன நினைப்பீர்கள்
எம் ஜி ஆர் - இப்போது நான் புகழ் பெற்று இருப்பவன்.. தெரிந்தோ தெரியாமலோ யாருக்காவாது தவறிழைத்திருக்கக்கூடும்.. ஆனால் சாப்பாட்டுக்குகூட வழியின்றி தவித்த அந்த நாட்களில் , யாருக்கும் எந்த தீங்கும் இழைக்காதபோது , எங்களை காரமின்றி அவமானப்படுத்தியவர்கள் பலர் உண்டு... வேறு வழியின்றி அவ்ற்றை சகித்துக்கொண்ட அந்த நாட்களை நினைத்து ஆறுதல் அடைவேன்
அம்மா புகழைப்பாடும் நீங்கள் அப்பாவைப் புகழ்வதில்லையே?
எம் ஜி ஆர் . அம்மா என்பதிலேயே அப்பாவும் வந்து விடுகிறாரே.. தந்தை இன்றி தனயன் ஏது... அப்பாவுக்கும் பயந்து நடக்கும் பலர் அம்மாவை மதிப்பதில்லை..எனவேதான் அம்மாவுக்கு முக்கியத்துவம் தருகிறேன்,, ம்ற்றபடி நான் இருவரையுமே வணங்குபவன்
ஆன்மிக படங்களில் ஏன் நடிப்பதில்லை?
தாய்ப்பாசம். பிறர்க்கு உழைத்தல் , தீமையை வெல்லல்.. இவைதான் ஆன்மிகம்,,, அப்படிப்பார்த்தால் என் படங்கள் எல்லாமே ஆன்மிக படங்கள்தான்
சத்துணவு திட்டம் வெற்றி பெறாது ,,,எம் ஜி ஆருக்கு பொருளாதாரம் தெரியவில்லை என்கிறாரே கலைஞர்?
எனக்கு பொருளாதாரம் தெரியாது.. நான் படிக்காதவன்,, ஆனால் ஏழைகளின் பசி தெரியும்.. ஏழைகள்தான் என்னை முதல்வராக்கி இருக்கிறார்கள்... அவர்களுக்கு நல்லது செய்வது என் கடமை
பெரியார்.. அண்ணா .,, யார் சிறந்தவர்?
சுய மரியாதை நம் அடிப்படைத் தேவை.. இதை வலியுறுத்தியவர் பெரியார்... அவர் சொன்னதை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அண்ணா.. இருவரும் சிறந்தவர்கள்தான்..அவர்களைப்பற்றி ஆராய்வதை விட அவர்கள் சொன்னபடி நடக்கிறோமா என நம்மை நாமே ஆராய்வதே முக்கியம்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]