இன்று அந்த பகுதி மக்கள் வாழும் - அதுவும் பணக்காரர்கள் வசிக்கும் - வசதிமிகு பகுதியாகி விட்டது..அந்த உயிரிகள் இன்று இல்லை
எத்தனையோ அரிய உயிரிகள் அழிந்தனவோ யாருக்குத் தெரியும்?
நம்மிடம் இது குறித்த ஓர் அறியாமை இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
ஏதாவது புது வகை பாம்பைப் பார்த்தால் என்ன செய்வோம்.. பாம்பு கூட வேண்டாம்.. பழுப்பும் , ஊதாவும் கலந்த ஒரு வினோதமான வண்ணத்தில் ஒரு புழு நெளிகிறது... என்ன செய்வோம் ?
உடனே காலில் மிதித்து கொன்று விடுவோம்.. ஒருவேளை அதுதான் அந்த இனத்தின் கடைசி பிரஜையாக இருக்கக்கூடும்..
இப்படிப்பட்ட அரிய இனங்கள் இன்னும் சில தப்பி பிழைத்து வாழ்ந்து வருகின்றன
அப்படி ஒரு அரிய தவளை இனம் கேரளா அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
டெல்லி பலகலைக்கழகத்தை ஆய்வாளர்கள் சோனாலி கார்க் மற்றும் அவரது சீனியர் எஸ் டி பிஜு ஆகியோர் இதை கண்டுபிடித்தவர்கள் ஆவர்
இந்த தவளை வெறும் நான்கு நாட்கள் மட்டுமே கண்ணில் படுகிறது..அதன் பின் எங்கோ மறைந்து ரகசிய வாழ்க்கை நடத்துகிறது..எனவே இப்படி ஒரு தவளை இருப்பதே தெரியாமல் இருந்தது
இதன் டி என் ஏ யை சோதித்துப்பார்த்ததில் இதன் மரபணு இந்திய தவளைகள் எதனுடனும் ஒத்துப்போகவில்லை... முற்றிலும் புதிய இனம்..இது போன்ற இனம் , ம்லேசியா , வியட் நாம் போன்ற நாடுகளில்தான் இருக்கின்றன.. அந்த காலத்தில் ஆசிய பகுதிகள் அனைத்தும் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்கலாம் என்பதை இது காட்டுவதாக கருதுகின்றனர்
இதன் முதுகுப்புறத்தில் கண்கள் போன்ற வட்டமான இரு மச்சங்கள் இருக்கின்றன
போரிட வரும் எதிரியை குழப்ப இந்த கண் பயன்படுகிறது
தன் காதலியை கண் அடித்து கரெக்ட் செய்யவும் இந்த அமைப்பு பயன்படுகிறது...
அறிய வேண்டிய அரிய விஷயம்தான் இது
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]