Friday, March 1, 2019

பாகிஸ்தான் படுகொலையை பதிவு செய்த தமிழ் பத்திரிக்கையாளர்


   விமானி அபிநந்தன் மீட்கப்பட்டதை  நாடே கொண்டாடுவதில் ஒரு தமிழனாக நமக்கு மகிழ்ச்சி...   எங்கோ ஒரு பஞ்சாப் கிராமத்தில் யாரோ ஒரு வட நாட்டுப் பாட்டி , இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவது நெகிழ்ச்சி...

அடிக்கடி போர்களால் பாதிக்கப்படும் வட நாட்டுப் பகுதிகள் இது போன்றவற்றில் காட்டும் அக்கறை புரிந்து கொள்ளத்தக்கதுதான்,,,

பெரும்பாலும் இது சார்ந்த தகவல்களை பாகிஸ்தான் ஊடகங்கள் / வெளி நாட்டு ஊடகங்கள் / வட மா நில ஊடகங்கள் தரும் , அதை வைத்துதான் நாம் பேசுகிறோம்

ஆனால் இதே போன்ற ஒரு சூழலில் - பங்களாதேஷை பாகிஸ்தானிடம் இருந்து விடுவித்த நிகழ்வுக்குப் பிறகு பங்களாதேஷில் நிலவிய சூழலை ஒரு தமிழ் பத்திரிக்கையாளர் நேரடியாக அங்கே சென்று பார்த்து பதிவு செய்துள்ளார் என்பது விஷ்யம் தெரிந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.. வெகு ஜன திரளுக்கு இது தெரியவில்லை

பத்திரிக்கையாளர் சாவி தினமணிக்கதிர் ஆசிரியர் என்ற முறையில் ஐவர் அடங்கிய அணியுடன் பங்களாதேஷ் சென்று அதன் அதிபரை சந்தித்து அந்த அனுபவத்தை பதிவு செய்துள்ளார்.. பங்களாதேஷ் பயணம் என்ற நூலாக அது வெளிவந்துள்ளது

இவர் ஏற்கனவே மகாத்மா காந்தியின் “ நவ காளி யாத்திரை “ நிகழ்வை நேரடியாக பதிவு செய்துள்ளார் என்பதை பலர் அறிவீர்கள்


அறிவு ஜீவு பாவனை இன்றி , நம்மில் ஒருவர் அந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்றால் எப்படி உணர்வோமோ அந்த பாணியில் எழுதுவது இவரது தனித்தன்மை

பங்களாதேஷ் சென்ற போது நாய் ஒன்று தமது வாகனத்தில் அடிபட்டு இறந்ததை வருத்தத்துடன் சொல்லி இருப்பார்.. பிறகு இன்னொரு இடத்தில் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டோரின் எலும்புக்கூடுகளை குவியல் குவியலாக பார்த்தபோது நாய் நினைவு ஒன்றும் இல்லாமல் போனது என எழுதி இருப்பார்

அவ்வளவு பெரிய வரலாற்று நிகழ்வை இப்படி சாதாரண மனிதனின் எண்ண ஓட்ட அடிப்படையில் எழுதி இருப்பதை நூலின் தனித்தன்மை என்பேன்

இவருடன் கூடச்சென்ற மற்றவர்களும்கூட தமது அளவில் தனிச்சிறப்பு கொண்டவர்கள்தான்.,, எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை கூட சென்றவர்களுள் ஒருவர்.. ஆனால் புஷ்பா தங்கதுரை என்ற எழுத்தாளராக அல்ல... ஸ்ரீ வேணுகோபலனாக...

நாடு சுதந்திரம் பெற்று தேசத்தை உருவாக்கி கொண்டிருந்த அந்த முக்கியாமான நேரத்தில் , பல பணிகளுக்கு மத்தியில் , இந்தியாவில் வந்தவர்கள் என்பதற்கு மரியாதை கொடுக்கும் வகையில் , இவர்களுக்கு நேரம் ஒதுக்கி பேசி இருக்கிறார் அதிபர் .. மதச்சார்பற்ற சோசலிச அரசே தன் கனவு என்பது உள்ளிட்ட பல விஷ்யங்கள் இந்த பேட்டியில் பதிவாகியுள்ளன


அவரது அவாமி லீக் கட்சிதான் இன்று அந்த நாட்டை ஆண்ட போதிலும் அவர் கனவு இன்று நனவாகவில்லை என்றே சொல்ல வேண்டும்...தேசத்தந்தையான அவர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்ட்தன் தாக்கம் இன்று வரை தொடர்கிறது என்பது ஒரு சோகம்


அவரது ஆளுமையை ரசனையை கனவுகளை நூல் சிறப்பாக பதிவு செய்துள்ளது

படித்துப்பாருங்கள்

பங்களாதேஷ் பயணம் - சாவி

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா