நம் ஊரில் தேர்தல் அல்லோலகல்லோல படுகிறது,,, வட கொரியாவிலோ சற்றும் பரபரப்பின்றி அமைதியாக தேர்தல் நடந்து ஜன் நாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது
கொரிய ஜன நாயக மக்கள் குடியரசு என்பதுதான் இந்த நாட்டின் உண்மையான பெயர்.. பெயருக்கிணங்க ஜன நாயகம் இங்குதான் காப்பாற்றப்படுகிறது
அனைவருமே கட்டாயமாக வாக்களித்தாக வேண்டும் என்பது இங்கு இருக்கும் சட்டம்... எனவே எப்போதுமே 100% வாக்குப்பதிவு இருக்கும்
நாடாளுமன்றதுக்கு அளவு கடந்த அதிகாரம் உண்டு.. நாடாளுமன்றம் நினைத்தால் அதிபரை பதவி நீக்கம் செய்யலாம்.. ஆனால் நாடாளுமன்றம் அப்ப்படி நினைக்கவே நினைக்காது
காரணம் நாடாளுமன்றம் ஒரே ஒரு முறைதான் கூடும் ,, கால வரையின்றி கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்து விட்டுசங்கம் கலைக்கப்படும்
நாடாளுமன்றத்தின் ஒரே வேலை அவ்வப்போது கூடி அதிபர் முடிவை ஏற்பதாக அறிவிப்பது மட்டுமே
தேர்தல் இன்னும் சுவாரஸ்யமானது... வாக்குச்சீட்டில் ஒரே ஒரு வேட்பாளர் பெயர் மட்டுமே இருக்கும்... எனவே அவர்தான் 100% வாக்குகளைப் பெறுவார்
அவரைப்பிடிக்கவில்லை என்றால் , அவர் பெயரை அழிக்கும் வாய்ப்பு வாக்காளர்களுக்கு உண்டு.. ஆனால் அந்த வாய்ப்பை யாரும் பயன்படுத்துவதில்லை... அப்படி பயன்படுத்தினால் தேடி வந்து உதைப்பார்கள்
100 % வாக்குப்பதிவு... 100% வாக்குகளைப்பெறும் வேட்பாளர் என ஜன் நாயகம் பேணப்படும் வட கொரியா , உலகுக்கே முன் மாதிரி என சொன்னால் மிகை இல்லை
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]