பேனா ரசிகர்களுக்கு இரிடியம் நிப் என்றால் மிகவும் பிடிக்கும்., எளிதில் தேயாது.. நல்ல லைஃப் வரும்..,, எழுதுவதற்கு சூப்பராக இருக்கும்
அப்ப நான் ஒரு இரிடியம் நிப் வாங்குகிறேன் என்கிறீர்களா?
உண்மையில் இரிடியம் நிப் என்பது உலகில் இல்லை... ஒரு காலத்தில் இருந்தது... அதுவும் உலோக கலைவையின் ஒரு சின்ன பகுதியாகவே இரிடியம் இருக்கும்
அதுவும் நிப்பின் நுனிப்பாகம் மட்டுமே..
கொஞ்சூண்டு இரிடியம் இருந்தாலும் இரிடியம் நிப் என அழைத்தார்கள்.. இப்போது இரிடியமே இல்லாமல் , இரிடியம் நிப் என்கிறார்கள்
அப்படி என்றால் ஏமாற்றுகிறார்களா என்றால் இல்லை... நகல் எடுப்பதற்கு பொதுவான பெயராக ஜெராக்ஸ் இருப்பது போல , தரமான நிப் என்பதன் பொதுப்பெயராக இரிடியம் ஆகி விட்டது.. தரமான நிப் தான்.. ஆனால் அது இரிடியம் இல்லை
இரிடியம் என்பது தங்கத்தை விட விலை உயர்ந்த உலோகமாகும்... உலகில் வெகு குறைந்த அளவே கிடைக்கிறது
இதை பயன்படுத்திதான் பல மோசடிகள் நடக்கின்றன.. அபூர்வமான இரிடியம் சிலை , ரைஸ் புல்லர் என்றெல்லாம் சதுரங்க வேட்ட பாணியில் பல இடங்களில் மோசடி நடக்கிறது
விண் கல் ஒன்று பூமியில் மோதியதாகவும் அதனால்தான் டைனோசர் உள்ளிட்ட பல உயிர்கள் அழிந்ததாகவும் சொல்வார்கள்...
அந்த விண்கல் இரிடியத்தால் ஆனது என ஒரு தியரி உண்டு.. இப்போது பூமியில் கிடைக்கும் இரிடியத்தை விட , அந்த விண்கல்லில் இருந்த இரிடியத்தின் அளவு அதிகம்
ஒரு நண்பர் என்னிடம் தன் பென்னை கொடுத்து எழுதிப்பார்க்க சொன்னார்..,, நன்றாக எழுதியது
இரிடியம் நிப் என்றார் பெருமையுடன்.... அவர் மகிழ்ச்சியை குலைக்க விரும்பாமல் , அறிவியல் உண்மையை மறைத்தேன்...
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]