மற்ற பண்டிகைகளுக்கும் சிவ ராத்திரிக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு
மற்றவை எல்லாம் எப்படி கொண்டாடப்பட வேண்டும் , அப்படி அனுசரிக்க வேண்டும் என ஒரு வரைமுறை இருக்கும்... அது ஊருக்கு ஊர் , ஜாதிக்கு ஜாதி மாறுபடக்கூடும்
ஆனால் சிவராத்திரி என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மாறுபடும்
இது ஒரு பண்டிகையே அல்ல என புறக்கணிப்போர் உண்டு
ஒரு குருவின் வழிகாட்டுதலில் இரவை கழிப்போர் உண்டு
ஆலயம் செல்வோர் , மயான பூஜை என பல வகை உண்டு
நான் முதன் முதலில் சிறுவயதில் இரவு முழுக்க வீடியோவில் சிறப்பு திரைப்படங்கள் பார்த்ததுதான் முதல் சிவராத்திரி
நண்பர்களுடன் பேசியபடி இரவை கழித்தது... குடும்ப ஆலயத்தில் என் கைகளாலேயே பூஜை செய்தது... ருத்ரபூமியாம் சுடுகாட்டில் , சடலங்கள் மத்தியில் அமர்ந்து , நாமும் ஒரு நாள் சடலம்தான் என்ற உணர்வுடன் பூஜை செய்தது , ராமகிருஷ்ணா மடத்தில் அழகாக மந்திரங்கள் சொல்லி ( நம் கைகளில் அச்சிடப்பட்ட மந்திரங்களை கொடுத்து விடுவார்கள் ) சிவனை வழிபட்டது... இரவு முழுக்க நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது , இரவு முழுக்க வாசிப்பு , வாசிப்பு குறித்த விவாதம் என ஞானத்தை வழிப்பட்டது என பல ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அனுபவம்
இந்த ஆண்டு அனுபவத்தை , இறைவன் விரும்பினால் , பிறகு எழுதுவேன்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]