அந்த காலத்தில் எம் ஜி ஆரும் சிவாஜியும் இரு துருவங்களாக இருந்தனர்.. நடிப்பு பாணியில் மட்டும் அல்ல.. இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் , சக நடிகர்கள் என அனைத்து துறையினருமே இப்படி பிரிந்து இருந்தனர்
உதாரணமாக தேவர் ஃபில்ம்ஸ் சிவாஜியை வைத்து படம் எடுக்காது.,, அது முழுக்க முழுக்க எம் ஜி ஆர் ஆதரவு அணி.. அதுபோல பீம்சிங் போன்ற பலர் சிவாஜி அணியை சேர்ந்தவர்கள்
அசோகன் எம் ஜி ஆர் ஆதரவாளர் என்றாலும் , சிவாஜி படத்தில்( உயர்ந்த மனிதன் ) அசோகன் ஒப்பந்தம் ஆனார்... இது இருவருக்குமே பிடிக்கவில்லை என்றாலும் ஏ வி எம் என்ற பெரிய நிறுவனம் படம் என்பதால் சேர்ந்து நடித்தனர்
அதில் ஒரு காட்சியில் உணர்ச்சிகரமாக பேசி விட்டு அசோகன் மரணம் அடைவது போல ஒரு காட்சி... அசோகன் நடிப்பு இயக்குனருக்கு அவ்வளவாக பிடிக்காததால் ரீ டேக் வேண்டும் என்றார்
அசோகனை தனியாக அழைத்த சிவாஜி , அந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என நடித்துக்காட்டினார்..
நம் எதிரிக்கு நம் மேல் என்ன அக்கறை என அசோகனுக்கு குழப்பம்.. தப்பாக அட்வைஸ் கொடுத்து தன்னை வைத்து காமெடி செய்கிறாரோ என இயக்குனரிடம் கேட்டார்
சிவாஜி அப்படிப்பட்ட ஆள் இல்லை... அவர் சொன்ன மாதிரி செய்யுங்க என சொல்லி விட்டார் இயக்குனர்
சிவாஜி இயக்குனரிடம் சொன்னார்
அசோகனெல்லாம் ஓர் ஆள்.. அவனை எனக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனாலும் காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காக அவனுக்கு உதவ வேண்டியதாகி விட்டது என்றார்
எது எப்படியோ . காட்சி நன்றாக வந்தது.. ஒளிப்பதிவு நடிப்பு , வெளிச்சத்துக்கு முக்கியம் கொடுத்து பதிவு செய்துள்ள நேர்த்தி என பலராலும் பாராட்டப்பட்ட காட்சியை நீங்களும் பாருங்கள்
அசோகன் நடிப்பு
நல்ல தகவல். சிறப்பாக எழுதியுள்ளீர்கள். உயரந்த மனிதன் ஒரு வங்காள படத்தின் பிரதி. உண்மையில் சிவாஜி கதாநாயகனின் வேடத்தை விட அசோகன் நடித்த அந்த டாக்டர் கதாபாத்திரத்தையே நடிக்க விரும்பியிருக்கிறார். ஆனால் சிவாஜி நாயகனாக நடித்தால்தான் படம் ஓடும் என்ற இயக்குனரின் எண்ணப்படி அவர் அந்த வேடத்தை செய்திருந்தார் என்று படித்திருக்கிறேன்.
ReplyDelete