வெறும் நடிகராக இருந்தபோது திமுக அனுதாபியாகவே அறியப்பட்டவர் விஜய்காந்த்
கண் சிவப்பும் கறுப்பும் கலந்த கலர்ல இருக்கு என சக நடிகர்கள் அவரை வர்ணிப்பது
உறவுக்கு கை கொடுப்பேன் . உரிமைக்கு குரல் கொடுப்பேன் என அவர் பேசுவது
திமுக கொடியை சின்னத்தை அவ்வப்போது காட்டுவது
என திமுக சார்பாளராகவே அவர் இருந்தார்
கட்சி ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் அவர் வருகை திமுகவுக்கே சாதகமாக இருந்தது... அதிமுக வாக்குகளை உடைத்து அடுத்தடுத்து திமுக வெற்றிகளுக்கு காரணமாக இருந்தார்
நமக்கு பலன் இன்றி திமுகவுக்கு உதவுகிறோமே என நினைத்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார்... அந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது
அவரிடம் இருந்தது எம் ஜி ஆர் அனுதாபிகளின் வாக்குகள்.. அதிமுகவின் அந்த வாக்குகளைத்தான் பிரித்து வந்தார்... எனவே அந்த கூட்டணியால் ஓட்டு சிதறல் தடுக்கப்பட்டு வெற்றி கிட்டியது
ஆனால் ஒரு கட்டத்தில் திமுக பக்கம் சாயத்தயார் என காட்டிக்கொண்டார்... பேச்சுகள் நடத்தினார்... விளைவாக எம் ஜி ஆர் வாக்கு வங்கியை இழந்தார்
செல்வாக்கு மங்கலாயிற்று
இதை உணராமல் திமுகவுடன் நெருக்கத்திலேயே இருந்தார்
இந்த சூழலில்தான் திமுகவினரின் ஆபாச பேச்சுகள் , அவதூறுகள் என அவர் மீது மீண்டும் ஒரு பரிதாபத்தை உருவாக்கி வருகின்றனர்
இப்போதைய சூழலில் இழந்த செல்வாக்கை அவர் மீண்டும் பெறுவது திமுக கைகளில்தான் உள்ளது
எந்த அளவுக்கு அவர்கள் அவதூறு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு அவருக்கு நல்லது
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]