Wednesday, April 10, 2019

எந்த மந்திரம் சக்தி வாய்ந்தது?



தினம் தோறும் சுந்தர காண்டம் படித்தால் நல்லது...லலிதா சக்ஸ்ர நாமம் , ருத்ரம் , விஷ்ணு சகஸ்ர நாமம் என ஒவ்வொன்றிலும் நல்லது இருப்பதாக சொல்வார்கள்

எதைச்சொன்னால் நல்லது என்ற குழப்பத்தில் பலர் எதையும் படிப்பதில்லை.. நம்பிக்கை இல்லை ..எனவே படிக்கவில்லை என்பது வேறு

குறிப்பிட்ட கடவுள் மீது நம்பிக்கை இருப்போருக்கும் குழப்பம் இல்லை..

 நம்பவும் இல்லை.. நம்பாமலும் இல்லை...  முயன்று பார்க்கிறேன்.. பலன் தெரிந்தால் ஓகே..இல்லாவிட்டால் விட்டு விடுகிறேன்.எதைப்படிக்கலாம் என்பவருக்குதான் குழப்பம்


குழப்பம்தான் தெளிவுக்கு வழி வகுக்கும் என்பதால்  எந்த முடிவிலும் இல்லாமல் தேடலுடன் இருப்பது நல்லது

என்னைப்பொருத்தவரை குர் ஆன்  பைபிள் உட்பட அனைத்தையுமே படிக்கிறேன்

படிப்பதால் நன்மை கிடைக்கிறதா கண்டிப்பாக கிடைக்கிறது...

புறவயமான நன்மைகளும் உண்டு.. அகவயமான நன்மைகளும் உண்டு


லலிதா சகஸ்ர நாமம் கேட்பதாலோ படிப்பதாலோ , சிவன் கோபம் அடைந்து  , தக்காளி என்னை விட அவ பெரிய தெய்வமா என நம் மீது தீச்செல் இடப்போவதில்லை

எதைப்படித்தாலும் கேட்டாலும் , மதம் கடந்த ஒரே இறையைத்தான் அது சென்று அடையும்... இறை என்பது நம்பாவிட்டாலும் , படிப்பதன் மூலம் நிறைவை அனுபவிக்கும் “ நான் “ என்பது மாறப்போவதில்லை

ஆக எதைப்படித்தாலுமே நல்லதுதான்...

ஆனால் குறிப்பிட்ட ஒன்றை மட்டுமே ஊன்றி படிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் வேறு விதம்.. மெக்கானிக்கலாக கடமைக்கும் படிக்காமல் , அறிவுப்பூர்வமான அணுகுமுறையோடு படிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் வேறு


ஜென்னில் சொல்வது போல , எல்லாவற்றையும் விட முக்கியம் , ஆரம்பித்து விடுதலே... ஏதோ ஒன்றை ஆரம்பித்து விடுவோம்



5 comments:

  1. இவ்வளவு மந்திரங்கள் சொல்லியும் உங்களுக்கு ஒன்னும் நடக்கலியே
    இன்றும் கூட உங்க ஜீவனம் மோசமான நிலையில் தானே இருக்கு

    ( உங்களை தனிப்பட்ட முறையில் மிக மிக நன்கு தெரியும் )

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா,,, என்னைப்பற்றி எனக்கே சரியாக தெரியாது... உங்களுக்காவது தெரிந்து இருக்கே,, மகிழ்ச்சி

      Delete
    2. "என்னைப்பற்றி எனக்கே சரியாக தெரியாது."

      நான் சொன்னது உங்கள் நிதி , தொழில் நிலவரம்

      Delete
    3. நாம் இங்கே பேசுவது மந்திரங்களால் விளையும் ஆன்மிக பலன்களை... ஓடாத மோட்டார் சைக்கிள் மந்திரம் போட்டால் ஓடாது... மோட்டார் சைக்கிள் நன்றாக ஓட தொழில் நுட்ப அறிவு தேவை... என் தொழில் சிறப்பாக இருந்தாலும் சரி... தட்டுத்தடுமாறினாலும் சரி.. அதற்கு காரணம் முழுக்க முழுக்க என் தொழில் திறன் சார்ந்தது... அதற்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை... தொழில் துறை குறித்த பதிவில் அதை கண்டிப்பாக பேசுவேன்..

      Delete
  2. வெற்றி என்றால் சாமானியர்களுளள்ளு லௌகீக வெற்றிமட்டும்தான் கணக்கு.உதாரணமா கவுன்சிலராகி ஆடி கார் வாங்குதல்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா