நாடகம் இலக்கியம் சினிமா என பல துறைகளில் ஆர்வம் காட்டினாலும் ஞா நியின் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக நோட்டா மீது அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வை சொல்லலாம்..
எதிர்ப்பு ஓட்டுகள் மூலம் வெற்றி என்ற ஃபார்முலாவை கண்டு பிடித்துள்ள அரசியல் கட்சிகள் ஜன நாயகம் என்பதையே கேலிக்குரியதாக மாற்றி விட்டன,
இவர் நல்லவர்,, நல்லாட்சி தருவார் என நினைக்கிறேன் , எனவே இவருக்கு வாக்களிக்கிறேன் என யாரும் வாக்களிப்பதில்லை
எதிரே நிற்பவன் சரியில்லை... எனவே குறைந்த பட்ச அயோக்கியனாகிய இவனுக்கு வாக்களிக்கிறேன் என வாக்களிக்கிறார்கள்
எனவேதான் அரசியல் காலண்டரில் யாருக்கும் கடைசிப்பக்கம் இல்லாமல் போய் விட்டது
எவ்வளவு பெரிய ஊழல் வழக்கில் சிக்கியவனும் , இனப்படுகொலை செய்தவனும் , மத ஜாதி படுகொலைல்கள் செய்தவனும் , இன்னொரு அயோக்கியனை ஒப்பிட்டு காட்டி ஆட்சிக்கு வந்து விட முடிகிறது
ஒருவர் பிடிக்கவில்லை என்பதற்காக இன்னொரு அயோக்கியனுக்கு வாக்களிக்கலாகாது
வாக்களிப்பை புறக்கணிக்கவும் கூடாது’
யாரையும் பிடிக்கவில்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும்... இதனால் என்ன பயன்? குறிப்பிட்ட அளவு கணிசமான வாக்குகளை நோட்டா பெற்றுவிட்டால் , சட்டப்படி அது யார் வெற்றியையும் பாதிக்காது என்றாலும் அரசிய்ல் கட்சிகள் மக்கள் கோபத்தை உணரும்... இவ்வளவு அதிருப்தி வாக்குகள் இருப்பதை அறிந்து புதிய சக்திகள் அரசியலுக்கு வரக்கூடும்...
நோட்டா பிடிக்கவில்லை என்றால் , இருப்பதில் நல்ல சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்
தோற்கப்போகிறவருக்கு ஏன் வாக்கு என நினைப்பது பெரிய தவறு.. நல்லவர்களுக்கு மக்கள் ஆதரவு உண்டு என்ற செய்தி பதிவு செய்யப்பட வேண்டும்
தென் சென்னை தொகுதியில் பொது உடைமை இயக்கத்தை சேர்ந்த் தோழர் ரோசி ரம்பம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டி இடுகிறார்
பாஜக் என்ற தீமை உருவாக காரணமே காங் திமுக கட்சிகள்தான்.. மீண்டும் மீண்டும் இவர்களுக்கே வாக்களிக்காதீர்கள் ..எங்களுக்கு வாய்ப்ப்ளியுங்கள் என்கிறார் இவர்
இது போன்ற புதிய கொள்கைப்பிடிப்புள்ள நல்லோரை மக்கள் மன்றத்தில் பேசி நண்பர்களுக்கு அறிமுகம் செய்வது நம் கடமை
nota, சுயேச்சைகளுக்கு வோட் போட்டா திமுக தோற்று பாஜக வெல்ல வாய்ப்பு உண்டாகும்
ReplyDeleteஎனவே திமுக வுக்கு மட்டுமே வோட் போடணும்
ஹாஹா... ஆமா... எந்த கட்சி தேர்தலில் நின்றாலும் எந்த கூட்டணி அமைந்தாலும் அது திமுக வோட்டுகளையே பிரிக்கும் :)
Delete