சென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது திமுக
பல தொகுதிகளில் மூன்றாம் இடம் பெற்றது... மூன்றாவது அணி என கருதப்பட்ட பிஜெபி தேமுதிக பாமக மதிமுக அணி இரு சீட்டுகள் பெற்று , திமுக அணியை மூன்றாம் இடத்துக்கு தள்ளியது
ஆனால் 2019 பாராளுமன்ற தேர்தல் அந்த அளவுக்கு மோசமாக இராது...
குறைந்த பட்சம் 10 தொகுதிகளில் வெற்றி உறுதி...
அதிமுக அணிக்கோ வெற்றி உறுதி என்ற நிலையில் 5 தொகுதிகள்தான் உள்ளன..
மிச்சம் 24 தொகுதிகளில் இழுபறிதான் காணப்படுகிறது..இந்த 24ல் 14ல் அதிமுகவும் 10ல் திமுகவும் நூல் இழை முன்னணி பெற்றாலும் அவை எப்படியும் மாறக்கூடும்...
திமுக வாக்குகள் கூடாவிட்டாலும் கணிசமான அதிமுக வாக்குகளை தினகரன் பிரிப்பதால் , சற்று வசதியான நிலையில் திமுக உள்ளது... அப்படி வாக்குகளை பிரித்தாலுமேகூட எளிதாக வெற்றி பெற முடியாத நிலையில்தான் திமுக உள்ளது
நாம் கஷ்டப்பட்டு திமுகவை ஜெயிக்க வைக்கிறோம் என உணர்ந்து அதிமுகவினர் ஏதாவது காம்ப்ரமைஸ் செய்து ஒன்றிணைந்து சட்ட சபை தேர்தலை சந்திப்பார்கள் என்றே தோன்றுகிறது
அப்படி நடந்தால் , திமுகவின் மகிழ்ச்சி குறுகிய கால மகிழ்ச்சியாக ஆகி விடக்கூடும்
என்ன காரணம் என்று தெரியவில்லை. அதிமுகவும் அழிய வேண்டிய கட்சிதான் ஆனால் முதல் வேலையாக திமுக தமிழகத்தில் இருந்து ஒழிய வேண்டும் அல்லது ஒரு letter pad கட்சியாக சுருங்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது.
ReplyDelete