அரசியல்வாதிகளில் சற்றேனும் நிதானமாக யதார்த்தமாக பேசுபவர் திருமாவளவன் தான்.. ஆரம்ப காலத்தில் ஆக்ரோஷ லாஜிக் அற்ற பேச்சுகள் பேசி இருந்தாலும் தற்போது மிகவும் பக்குவம் அடைந்த தலைவராக உருவாகி உள்ளார்..
அவரது பேட்டி ஒன்று தொலைக்காட்சியில் நேற்று ( 27.04.19) ஒளிபரப்பானது.. அதில் நான் ரசித்த சில பதில்கள். ( ரசிப்புக்கான காரணம் அடைப்புக்குள்)
கமல் கட்சி வாக்குகள் வாங்கும் என நினைக்கிறீர்களா?
திருமா- கண்டிப்பாக வாங்கும்.. திமுக மற்றும் அதிமுகவை விரும்பாத கணிசமான வாக்காளர்கள் இங்கு உண்டு.. அவர்கள் வாக்குகள் இவருக்கும் சீமானுக்கும் கிடைக்கும்
( திமுக கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேச மனதில் நேர்மை வேண்டும் )
பாமக - அதிமுக கூட்டணி பணத்தால் உருவான கூட்டணி என்ற கருத்து குறித்து?
அந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்ககூடும் என்றே நினைக்கிறேன்.. என்னிடம் ஆதாரம் இல்லை.. ஆனால் இது பொய் என்றால் அவர்கள் ஏன் மறுக்கவில்லை.. நாங்கள் ம ந கூ உருவாக்கியபோது சிலர் எங்கள் மீது பொய்யாக அவதூறு பரப்பினார்கள்... அதிமுக வின் பி டீம் என்றனர்... வைகோ இதற்காக கோபித்துக்கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இர்ந்து வெளி நடப்பு செய்தார்.. அந்த தார்மீக இவர்களிடம் ஏன் இல்லை...காரணம் குற்றச்சாட்டு உண்மை
( அவர் குறிப்பிடும் அவதூறை பரப்பிய திமுகவுடன் இப்போது சேர்ந்திருந்தாலும் திமுகவின் செயலை ஆவணப்படுத்தும் துணிச்சல் ஆச்சர்யகரமானது )
திமுகவினர் பணம் கொடுப்பதாக சொல்லி வேலூர் தேர்தலை ரத்து செய்துள்ளார்க்ளே ?
இதற்கு திமுகதான் பதில் சொல்ல வேண்டும் ( எங்கள் கூட்டணி ஆள் தப்பு செய்யவில்லை என அடித்து விடாத தன்மை ரசிக்க வைத்தது )
தமிழ் நாட்டில் பிஜேபி தோற்றாலும் மற்ற மா நிலங்களில் பிஜேபி வெல்லும் என்கிறார்களே?
அது நடக்காது// எல்லா மா நிலங்களிலுமே பிஜேபிக்கு எதிரான அலை உள்ளது.. அவர்களுடன் கூட்டணி சேரவே பலர் அஞ்சுகிறார்கள்
வங்கத்தில் மம்தா , ஒரிசாவில் நவீன் , ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு என பலரும் பிஜேபியுடன் சேர அஞ்சுகிறார்கள்.. பிஜேபி தோற்பது உறுதி
( அவர்கள் பிஜேபியுடன் சேரவில்லை என்பது உண்மைதான்.. ஆனால் வங்கத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் இம்முறை நான்காம் இடத்துக்கு செல்லும் அபாயம் உள்ளது... ஒரு சீட் கூட கிடைக்காமல் போகக்கூடும்..ஒரிசாவில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரசிடம் இருந்து பிஜேபி கைப்பற்றும் நிலை உள்ளது.. பிஜேபி நவீனுடன் ,மம்தாவுடன் சேர்ந்திருந்தால்தான் காங்கிரசுக்கு நல்லது... பிஜேபி அங்கு பெரும்பான்மை வெல்ல முடியாது என்பது உண்மை.. காங்கிரஸ் அங்கெல்லாம் அழிவை சந்திப்பதும் உண்மை.. இதைதான் சுட்டிக்காட்டி இருக்கிறார் )

No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]