ஏழு மணிக்கெல்லாம் வாக்குச்சாவடி சென்று விட்டேன். எனக்கு முன்பே பலர் குழுமி இருந்தனர்
சுவர் விளம்பரங்கள் , பூத் ஸ்லிப் , காரில் வந்து அழைத்துச் செல்லம் என பல பாரம்பரியமான விஷ்யங்கள் அழிந்து விட்டன
நெட் மற்றும் ஸ்மார்ட் போன் யுகத்தில் பூத் ஸ்லிப் தேவை இல்லை என ஊழியர்கள் அவர்களாகவே முடிவெடுத்து விட்டதால் , பல இடங்களில் பூத் ஸ்லிப் சரியாக வழங்கப்படவில்லை...
இன்னும் பலருக்கு நெட் மற்றும் போன் இணைப்பு இல்லை என்பதே யதார்த்தம்
ஐந்தரை மணிக்கெல்லாம் கட்சி பிரதினிதிகள் வந்து . மெஷின் சரியாக இருக்கிறதா என சோதித்து , ஒரு மாதிரி தேர்தல் நடத்தி , முடிவை சரி பார்த்து , கை ஒப்பம் இட்டு , ஏழு மணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க தொடங்கலாம் என்பதே திட்டம்
ஆனால் கட்சிபிரதி நிதிகள் யாரும் 5 மணிக்கு வரவில்லை.. அரசு ஊழியர்கள் பாவம் , தேவையின்றி காத்திருந்த்னார்
இதன் காரணமாக , தேர்தல் பல இடங்களில் தாமதமாக தொடங்கியது... பலர் பொறுமையின்றி கிளம்பி விட்டனர்,, வாக்கு எண்ணிக்கை குறைய இதுவும் ஒரு காரணம்
ஆனால் கட்சி பிரதினிதிகளை குறை கூற எந்த பத்திரிக்கையும் தயாராக இல்லை... மெஷின் கோளாறு , அலுவலர்கள் மெத்தனம் என சேஃப் ஆக செய்தி வெளியிடுகின்றனர்
சென்ற தேர்தலை விட வாக்கு எண்ணிக்கை குறைவு என்பது யாருக்கு சாதகம் என தெரியவில்லை
சென்ற தேர்தலில் மோடிக்க்கு வாக்களித்தவர்கள் இம்முறை வாக்களிக்கவில்லை என வைத்துக்கொண்டால் , அது ராகுலுக்கு சாதகம்
சென்ற முறை நிலவிய ஆளும் கட்சி எதிர்ப்பலை இப்போது இல்லை என வைத்துக்கொண்டால் அது மோடிக்கு சாதகம்
புதிய வாக்காளர்கள் பலர் திரண்டு வந்து வாக்களித்தனர்..இவர்க்ளெல்லாம் பத்திரிகைகள் படிக்காதவர்கள்.. எனவே இவர்கள் வாக்குகளை கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது
பொறுத்து இருந்து பார்ப்போம்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]