Pages

Sunday, April 28, 2019

சேற்று தாமரையும் , நற்றாமரை குள நல்லன்னமும் - சாரு நூல் குறித்து


சாருவின் நூல்களில் தனித்துவமான நூல் என்று “ ஒழுங்கின்மையின் வெறியாட்டம் “ நூலை சொல்லலாம்..

அவரது இலக்கிய , தத்துவ பார்வையை சொல்லும் ஆவணமாக இதை கருதலாம்..

பலரும் சாருவை ஏதாவது இலக்கிய சர்ச்சைகள் மூலம் அறிந்து கொண்டு அவரைப்பற்றி ஏதாவது ஒரு மன பிம்பம் உருவாக்கி வைத்திருப்பார்கள்.. அவருடன் பழகும் நண்பர்கள் சிலரேகூட அந்த நட்பின் அடிப்படையில் ஒரு கருத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள்..

அவர் எழுதியுள்ள நூல்களை படிக்க படிக்கத்தான் அவர் குறித்த ஒரு முழுமையான பார்வை கிடைக்கும்.. அவரது ஒரு நூல் என்பது நூறு நூல்களுக்கு சமமாகும்.. அத்தனை ரெஃபரன்சுகள் . குறிப்புகள் , அறிமுகங்கள் ஒரு நூலில் இருக்கும்


மற்றவற்றை படிக்காவிடினும் அவரது “ ஒழுங்கின்மையின் வெறியாட்டம் “ என்ற நூலை படிப்பது நல்லது..தனது புத்தகங்களில் தனக்கு பிடித்த புத்தகமாக அவரே சொல்லும் நூல் இது

சமரசம் , விகடன் , குமுதம் , பச்சக் குதிரை ( மலையாளம் ) , கலாகௌமுதி ( மலையாளம் ) , கதை இதழ் , சதங்கை , வெப் உலகம் என பல்வேறு இதழ்களில் வெளி வந்த பேட்டிகளின் தொகுப்பு இது

தன் கருத்தை தெளிவாகவும் அறிவுபூர்வமாகவும் பதிவு செய்திருக்கிறார் சாரு.. எழுத்து என்பதன் பயன் என்ன , இலக்கியம் , நான் லீனியர் , பின் நவீனத்துவம் என பல விஷ்யங்கள் குறித்து பாடம் எடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம்

சில இடங்களில் கேள்வி கேட்பவர் , விபரம் தெரியாமல் கேட்டாலும் , அதை சரியான விதத்தில் உள்வாங்கிக்கொண்டு பதில் அளித்திருப்பது சிறப்பு

உதாரணமாக எழுத்து என்பது சன்னியாசம் போன்றது என்கிறார் சாரு..

அதன் தாத்பர்யம் பேட்டி எடுத்தவருக்கு புலப்படவில்லை..  மனைவியின் அடி தாங்க முடியாமல் , ஊரை விட்டு ஓடுவதுதான் சன்னியாசம் என நினைத்துக்கொண்டு , அவர் கேட்கிறார்.. சன்னியாசம் என்பது வாழ்வில் இருந்து தப்பிச் செல்வது அல்லவா?

அதற்கு சாரு அழகாக பதில் சொல்கிறார்.. நீட்சே , வான்கோ , தாந்த்ரீக யோகம் போன்றவற்றை தொட்டுக்காட்டி , சன்னியாசமும் எழுத்தும் எப்படி கைகுலுக்கிக்கொள்கின்றன என விளக்கி காட்டுகிறார்..

சுந்தர சாமியின் மேன்மையை பேசி இருக்கிறார் .. எழுதி இருக்கிறார்.. அது வேறு.. ஆனால் அவர் எழுத்து ஏன் ஃபேக் எழுத்து என அழைக்கப்படுகிறது என்பதை விளக்குகிறார்

இணையத்தில் எழுத ஆரம்பித்து அதற்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர் சாரு

அந்த தகுதியில் இணைய எழுத்தை அழகாக மதிப்பிட்டுள்ளார்..  ஊடகங்களில் ஒரே சினிமா , அரசியல் என அலுத்துக்கொண்ட நம் சமூகம் , இணையத்தை முழுக்க முழுக்க சினிமாவுக்கும், அரசியலுக்கும்தான் பயன்படுத்துகிறது.... இதை அவர் சொல்லி படிக்கையில் வருத்தமாக இருக்கிறது

தமிழ் இலக்கியம் குறித்து மட்டும் அல்ல.. உலக இலக்கியத்தையும் அறிமுகம் செய்கிறது நூல்

தமிழ் எழுத்தாளரான உங்களுக்கு சமஸ்கிருத பெயர் ஏன் என்ற கேள்விக்கு தனக்கு அறிவழகன் என்ற பெயரும் இருப்பதையும் அது தன் தாய்க்குகூட தெரியாத பள்ளிப்பெயர் என்றும் குறிப்பிடுவது சுவாரஸ்யம்

திராவிட இலக்கியம் , கனி மொழியுடனான நட்பு என பரபரப்புக்கும் பஞ்சம் இல்லை

ரஜினியின் இமயமலை பயணம் , தன் இமயமலை பயணம்.. இரண்டுக்குமான ஒப்பீடு கலகல


இப்படி விஷ்ய ஞானம் மிக்க நூலை  நகைச்சுவையுடன் படிப்பது சுகமான இருந்தாலும் ஒரே ஒரு குறை இருந்தது

இலக்கிய தரம் மிக்க இந்த நூலை , ஒரு நாலாம்தர பதிப்பகம் வெளியிட்டு இருந்தது

சேற்றில் முளைத்தாலும் தாமரையின் அழகு குறையப்போவதில்லை என்பதால் தரமற்ற பதிப்பகம் என்றாலும் நூலின் தரம் சிறப்பாகவே இருந்தது

ஆனால் என்னதான் இருந்தாலும் சிங்க பாலை தங்க தட்டில் வைப்பதே சிறப்பு

அந்த வகையில் இந்த நூல் இப்போது ஜீரோ டிகிரி  பதிப்பாக வெளி வருகிறது

 நற்றாமரை குளத்தில் நல்லன்னம் சேர்ந்தது போல தரமான ஒரு நூல் தரமான பதிப்பகம் மூலம் வெளிவருவது மகிழ்ச்சி


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]