எம் ஜி ஆர் , சிவாஜி , ஜெமினி பாடல்களை அவ்வப்போது கேட்கிறோம்..
கேட்டதுமே பாடலை அடையாளம் காண முடியும்..
ஆனால் எழுபதுகளில் வந்த பல பாடல்களை நம்மால் அடையாளம் காண முடியாது
எழுபதுகளிலும் சிவாஜி எம் ஜி ஆர் நடித்தாலும் பெரும்பாலான படங்கள் ஜெய்கணேஷ் , முத்துராமன், விஜயகுமார் , சிவகுமார் நடித்த பட்ங்களாகும்
இவர்கள் மாஸ் நடிகரகள் இல்லை என்பதால் , இந்த படங்கள் பெரிய அளவில் பேசப்படுவது இல்லை ..
சிவாஜி நடித்த 70கள் படங்கள் பலவும்கூட அவர் ரசிகளாலேயே கூட பேசப்படுவது இல்லை
ஆக , 70கள் என்பது ரஜினி கமல் யுகம் ஆரம்பமாவதற்கும் , சிவாஜி எம்ஜிஆர் யுகம் முடிவதற்கும் இடைப்பட்ட காலம் என்பதால் , நட்சத்திர பலம் இல்லாத காலமாகி விட்டது...
பல அற்புதமான பாடல்கள் இந்த கால கட்டத்தில் வந்துள்ளன.. ஆனால் மேற்சொன்ன காரணத்தால் பிரபலமாகவில்லை
----
இன்றைய ஆன்மிக சிந்தனை
காஞ்சி பெரியவர்
வட மொழியில் கூட்டெழுத்துகளை தமிழில் பிரித்து எழுதுகிறோம்.. க்ரு ஷ்ணா என்பதை கிருஷ்ணா என்கிறோம்.. அங்கே க்ரு என ஒரே எழுத்தாக வருகிறது.. க் முதலில் வரக்கூடாது என்பதால் கி என எழுதுகிறோம்
புரோகிதர் என்பது ப்ரோகிதர் என்பதன் தமிழ் வடிவம் என சிலர் நினைக்கிறார்கள்
இல்லை.. அது புரோகிதர்தான்
புரோ என்றால் முன்பு.. இதம் என்றால் நல்லவற்றை சொல்லுதல்
தீங்கு வருவதற்கு முன்பே , நல்லவற்றை சொல்லி வழி நடத்துபவர்தான் ப்ரோஹிதர்
எழுபதுகளில் வந்த ஏதாவதொரு பாடலை எடுத்துக்காட்டாய்த் தந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.
ReplyDelete