ஒரு காலத்தில் தமிழகத்தில் ஈழ விடுதலைப்போரின் முகமாக தமிழகத்தில் இருந்தது டெலோ இயக்கம் தான்... தன்னுடைய பாலைவன ரோஜாக்கள் படத்தில் நாயகனின் பெயருக்கு கலைஞர் சூட்டிய பெயர் சபாரத்தினம்
சிறீ சபாரத்தினத்தை கௌரவிக்கும் வகையில் அந்த பெயரை சூட்டி இருந்தார்
எம் ஜி ஆர் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்
அப்போது எம் ஜி ஆர் முதல்வர் என்பதால் விடுதலைப்புலிகளுக்கு பொருளதவி செய்ய முடிந்தது,,, விளைவாக புலிகள் மற்ற இயக்கங்களைவிட பலம் பெற்றனர்.. ஒரு கட்டத்தில் மற்ற இயக்கதவரை கொல்ல ஆரம்பித்தனர்...
சபாரத்தினம் என் சகோதரர் போன்ற்வர் ..அவரை ஒன்றும் செய்யாதீர்கள் என்ற கலைஞரின் வேண்டுகோளையும் மீறி அவரை கொலை செய்தனர் புலிகள்
ஒரு வேளை சபாரத்தினம் சாகாமல் இருந்திருந்தால் ஈழ தீர்வு விரைவில் ஏற்பட்டு இருக்கலாம்
அதன் பின் கால மாற்றங்களால் அவரை எல்லோரும் மறந்து விட்டார்கள்போல என நினைத்தேன்
ஆனால் அவர் கொலை செய்யப்பட்ட நினைவு நாளை ஒட்டி பரவலாக சுவரோட்டிகளை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது
எந்த கட்சிகள் ஆதரவும் இன்றி மக்கள் தன்னிச்சையாக இப்படி ஒரு போராளிக்கு மரியாதை செய்வது ஆச்சர்யம்தான்
போராளிகள் புதைக்கப்படுவது இல்லை... விதைக்கப்படுகின்றனர்
உங்களுக்கு ஈழ வரலாறு சுத்தமாக தெரியாது
ReplyDelete-----------------------------------------------------------
ஈழ போர் ஆரம்ப காலங்களில் பலமாக இருந்தது புளொட் அமைப்பும் , டெலோ அமைப்பும் தான்
காரணம் கருணாநிதி அல்ல
இந்திய ரோ தான் காரணம்
எம்ஜிஆர் வழங்கிய சில கோடிகள் ஏனைய அமைப்புகளுக்கு ரோ கொடுத்த பணத்துக்கு முன்னால் தூசு
ஆளணி எண்ணிக்கையில் புலிகள் மிக மிக கீ ழே ஆனால் சிறந்த , விசுவாசமானவர்களை மட்டும் சேர்த்து கொண்டார்கள்
முதன் முதலாக உள் அமைப்பு மோதலை தொடக்கி வைத்தது ஸ்ரீ சபாரத்தினம்
டெலோ அமைப்புக்குள் தாஸ் குழு , பொபி குழு என்று இரண்டு பிரிவு இருந்தது
இரண்டு குழுவுக்கும் மோதல் , இரண்டு குழுவுக்கும் தலைவர் சிறி . ஆனால் அவருக்கு தாஸ் குரூப்பை பிடிக்காது . ஒரு நிலையில் தாஸை கொல்ல முடிவெடுத்து சமாதான பேச்சுவார்த்தைக்கு வருமாறு பொபி அழைக்கின்றார் . வர சொன்ன இடம் யாழ் வைத்தியசாலைக்கு அருகில் வைத்து சுட்டு கொலை செய்யபபடடார்
அதன் பின் தாஸ் குரூப் போராளிகளால் சிறி யால் கொலை செய்யப்படடனர்