இப்படி ஒரு நடு நிலையான அரசியல் மற்றும் சமூக விமர்சன நாவலை படித்து எத்தனை நாளாகிறது என்ற வியப்புதான் பூரண சந்திர தேஜஸ்வியின் -சிதம்பர ரகசியம் என்ற கன்னட நாவலை படிக்கும்போது ( நான் படித்தது பா கிருஷ்ணசாமியின் தமிழ் மொழி பெயர்ப்பு ) ஏற்படுகிறது
இஸ்லாமியர் இந்துக்கள் தலித் பிராமணர்கள் பிற்படுத்தப்பட்டோர் அரசூழியர்கள் காட்டுவாசிகள் ஆன்மிகவாதிகள் பகுத்தறிவுவாதிகள்
என யாரையுமே விட்டு வைக்கவில்லை.. அவ்வளவு ஏன் ,.. எழுத்தாளர்களையுமே விட்டு வைக்கவில்லை.. அனைவருமே கேலி செய்யப்படுகின்றனர்
கர் நாடகத்தின் ஒரு கிராமத்தில் நடக்கிறது கதை.. ஏலக்காய் ஆய்வு மையத்தின் தலைவர் ஜோகிஹல் கொல்லப்பட்டு இருக்கிறார்.. அவர் ஏன் கொல்லப்பட்டார்... ஏலக்காய் உற்பத்தியை நிர்ணயிக்கும் காரணி எது என்பதை துப்ப்றிய ( ? ) ஷியாம் நந்தான் அங்காடி என்ற உளவுத்துறை அதிகாரி அந்த ஊருக்கு வருகிறார்...
அந்த ஊரில் ஒரு கல்லூரி இருக்கிறது...மாணவர்கள் பகுத்தறிவு இயக்கம் நடத்துகின்றனர்... ( டாக்டர் கோவூர் நாவலில் அவ்வப்போது வருகிறார் )
அந்த ஊரில் ஏற்படும் இஸ்லாமிய செல்வாக்கை ஒடுக்க இந்துக்கள் போட்டியாக மந்திரங்கள் ஓதுகின்றனறனர்
என்ன ட்விஸ்ட் என்றால் பகுத்தறிவு இந்துயிசம் இஸ்லாமியிசம் என எதுவுமே அந்த்தந்த சித்தாங்களுக்குமே உண்மையாக இருப்பதில்லை.. எல்லோருக்குமே ஒரு சுய நல செயல்திட்டம் இருக்கிறது.. அதற்கு ஒரு முகமூடியாக சித்தாத்தங்களை பயன்படுத்துகின்றனர்
கிருஷ்ண கௌடா என்பவர் வீட்டின் மீது இரவில் கற்கள் விழுகின்றன.. சாதி பிரச்சனையா. வர்க்கப்பிரச்சனையா... காதல் விவகாரமா.. பேயா ... கற்களுக்கு எது காரணம் என யாருக்கும் புரியவில்லை
ஜோகிஹல் இறந்து விட்டார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று ஒரு பிரச்சனை வேறு கிளம்புகிறது
உண்மை என்பது என்ன .., நடப்பதா அல்லது பலரும் சொல்வதா என்ற விவாதங்கள் நடக்கின்றன
இய்றகையை மனிதன் இப்படி அழித்துக்கொண்டே சென்றால் என்ன ஆவது என்ற கேள்வியும் பிறக்கிறது..
கொலையாளி யார்.. கற்களை வீசியது யார் என்ற ரகசியங்களை கண்டு பிடிக்கும் முன் காதல் விவாகரத்தை முன் வைத்து ப்ழைய பகைகளை தீர்த்துக்கொள்ள கலவரம் தூண்டி விடப்படுகிற்து
அறிவி ஜீவிகள் , பணக்காரர்கள் வியாபாரிகள் என அனைவரும் அதில் சிக்கிக்கொள்ளும்போது அதில் இருந்தெல்லாம் விலகி உயர்ந்த ஒரு இடத்தில் நிற்கின்றனர் இந்த பிரச்சனைகளுக்கு காரணமான காதலர்கள்
இப்படி கவித்துவமாக முடிகிறது நாவல்
இப்படி முடிந்தால் அது சினிமாட்டிக்.. ஆனால் இந்த காதலையுமே கூட கேலிதான் செய்கிறார் நாவல் ஆசிரியர்.
உண்மையில் அது காதலே அல்ல.. வெறும் வயதுக்கோளாறு என்பதை சொல்லி , காதல் என்பதை புனிதப்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறார்
ஆக , என்ன சொல்ல வருகிறார் என்பது பூடகமாகவே விடப்பட்டுள்ளது
மதங்கள் , இசங்கள் , நம்பிக்கைகள் , நம்பிக்கை இன்மைகள் , பகை , காதல் என எல்லாமே இயற்கை தன் வளர்ச்சிக்காக மனிதனை ஆடச்செய்ய பயன்படுத்தும் கருவிகள்தான் என்ற உண்மைதான் சிதம்பர ரகசியமோ என தோன்றுகிறது
உதாரணமாக , கோடிப்பேரை கொல் என சொன்னால் நாம் கொல்ல மாட்டோம்.. உன் சாதிக்கு மொழிக்கு இனத்துக்கு மதத்துக்கு எதிரி அவர்கள் என நம்மை தூண்டினால் கோடி மக்களை கொல்வோம்...
இதைத்தான் நாவல் சொல்கிறது என சொல்லவில்லை.. இப்படி பல சிந்தனைகளை தூண்டுகிறது நாவல்
படித்துப்பாருங்கள்
சிதம்பர ரகசியம் - பூர்ண சந்திர தேஜஸ்வி
போன்ற நூல்களை தவிர்த்துவிடுங்கள். தாங்கவே முடியாத மொழியாக்கச் சிக்கல்கள் கொண்டவை...////..என்று ஆசான் எழுதியிருக்காரே.மொழிபெயர்ப்பு தரமானதா?எளிமையானதா?
ReplyDeleteதரமான , சரளமான மொழி பெயர்ப்பு
Delete