Pages

Tuesday, May 14, 2019

இலக்கியமும் துணை நூல்களும்


பல முக்கியமான இலக்கிய நூல்களை நன்கு புரிந்து கொள்ளும் பொருட்டு ரீடர் என துணை நூல்கள் வெளியாகும்.. அதைப்படித்தால் அந்த இலக்கிய நூல் குறித்த ஆழமான பார்வை கிடைக்கும்..

இது கோனார் நோட்ஸ் போன்ற விளக்க உரை அன்று,  ஆழமான பார்வையை தரும் முயற்சி.. டொனால்ட் பார்த்தெல்மே போன்றோர் சிறுகதைகளை புரிந்து கொள்ள இது உதவும்

ரேமண்ட் கார்வர் , கதீட்ரல் என ஒரு கதை எழுதி இருக்கிறார்.. யாராவது விளக்கினால்தான் அந்த கதையின் அழகு தெரியும்,,  இலக்கிய மேடைகளில் இது போன்ற கதைகளை , ஒரு மணி நேரம்கூட அலசுவார்கள்.. அது போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு துணை நூல்கள்தான் உதவுகின்றன

தமிழில் மூல நூல்களே விற்பனைக்கு தடுமாறும் சூழலில் துணை நூல்களுக்கான தேவை இல்லாதிருந்தது,, ஆனால் இன்று படித்தவர்கள் அதிகமாக உருவாகும் சூழலில் வாசிப்பு அதிகமாகி உள்ளது.. எனவே துணை நூல்களும் வெளியானால் நல்லதுதான்

ஆனாலும் இப்படிப்பட்ட துணை நூல்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் உள்ளன

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான , கி ராஜ்நாரயணனின் எழுத்துலகம் என்ற நூலை ஓர் உதாரணமாக சொல்லலாம்

பிரேம் ரமேஷ் தொகுப்பில் வெளியான நூல் இது.. கிராவின் சிறுகதை , நாவல் , குறு நாவல் என அனைத்து எழுத்துகளையும் பற்றிய ஒரு குறுக்கு வெட்டுப்பார்வையை நூல் அளிக்கிறது

கிரா வை எப்படி புரிந்து கொள்வது ,.எப்படி அணுகுவது , பின் நவீனத்துவ சூழலில் வட்டார வழக்கு கதைகளின் இடம் என பல விஷயங்களை ஓர் ஆழமான கட்டுரையில் விளக்கி இருக்கிறார்கள் பிரேம் ரமேஷ்

என்னதான் எழுத்துலக துரோகிகள் என்றாலும் அவர்களது படைப்பாற்றலை குறைத்து மதிப்பிட முடியாது


அவர்களது துரோகத்தை மதிப்பிட்டு தண்டனை அளிப்பது இயறகையின் வேலை..

நம வேலை அவர்கள் படைப்பாற்றலை  மதிப்பிடுவது மட்டுமே..

அந்த வகையில் இது சிறப்பான நூல் எனலாம்

கி ராஜ் நாரயாணன் எழுத்துலகம் - பிரேம் ரமேஷ்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]