Thursday, May 2, 2019

திட்ட சொல்லி ரசித்த பெரியார்


பெரியாரை மேடை தோறும் கடுமையாக தாக்கி பேசி வந்தவர் காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்த சின்ன அண்ணாமலை

ஒரு நாள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் வந்தது

சின்ன அண்ணாமலைக்கு தர்ம சங்கடம்

ஆனால் பெரியார் சகஜமாக ஜாலியாக பேசினார்

- கதைகள் சொல்லி கலகலப்பாக பேசுவீர்களாமே... அப்படித்தான் பேச வேண்டும் என்றார் பெரியார்

- ஆமாம் அய்யா.. ஆனால் பெரும்பாலும் உங்களை தாக்கித்தான் பேசுவேன் என்றார் சின்ன அண்னாமலை

- அதனால் என்ன... எதுவுமே யாருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றுதானே நான் பிரச்சாரம் செய்து வருகிறேன்... கடவுளையே விமர்சிக்கலாம் என்பதுதானே என் கருத்து... எனவே என்னை விமர்சிப்பதை நான் ஏற்கிறேன்.. இன்னும் சொல்லப்போனால் , என் முன்னிலையே என்னை நீங்கள் விமர்சிக்க வேண்டும்.. அதை நான் ரசிக்க வேண்டும்... விழா ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.. வந்து பேசுங்கள் என்றார் பெரியார்

அந்த பெருந்தன்மையில் திகைத்த சின்ன அண்ணாமலை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார்

கருஞ்சட்டை தொண்டர்கள் முன் , பெரியார் முன்னிலையில் பெரியாரை தாக்கி பேசினார்

பெரியார் புன்னகையுடன் ரசித்தார்

திக தோழர்கள் அமைதியாக எந்த பிரச்சனையும் செய்யாமல் கேட்டனர்

பேச்சு முடிந்து விடை பெறும் போது , அன்பு பரிசாக பத்து ரூபாய் அளித்து விடை கொடுத்தார் பெரியார்


இந்த பெருந்தன்மையை அப்படியே பதிவு செய்து தன் மேன்மையை காட்டியுள்ளார் சின்ன அண்ணாமலை

மேதைகள் , பெரியோர்கள்  வாழ்ந்த மண் இது

2 comments:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. சின்ன அண்ணாமலை தனி இயக்கமா வைத்துக்கொண்டு திகவை எதிர்த்ததன் காரணம் உண்டு.அதற்குமுன்னர் திகவினர் தெருவில் போற வர காங்கிரஸ்காரர்களை வம்பிழுப்பது அசிங்கமா திட்டுவது அவர்கள் எதிர்வினையாற்றினால் சுற்றிவளைத்து தாக்குவது என்று இருந்தது.இதை காமராஜரிடம் சொல்லி அவர் அனுமதியோடு பதிலடி கொடுக்கும் இயக்கத்தை சின்ன அண்ணாமலை துவக்கினார்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா