தேர்தல் முடிவுகளை அதிமுக , திமுக , பாஜக , காங்கிரஸ் என அனைத்து அலுவலகங்களிலுமே ஸ்வீட் கொடுத்து கொண்டாடியதை மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர் என சில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இப்படி ஒரு நிலை - அனைவருமே மகிழும்படிதான் தேர்தல் முடிவு இருக்கும் என சொன்ன ஒரே வலைத்தளம் நம் வலைத்தளம்தான் என்பதை தொடர்ந்து படிப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள்
இப்படி சரியாக கணித்தேன் என்றால் அதற்கு காரணம் , இந்த கட்சி ஜெயிக்க வேண்டும் , இது தோற்க வேண்டும் என்பதெல்லாம் இல்லாமல் , நடு நிலையுடன் மக்கள் எண்ணத்தை கவனித்தேன் அவ்வளவுதான்
எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள்தான்
உண்மையான திராவிட இயக்கம் எது என்பதற்கான விடையும் கிடைத்துள்ளது
பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி அணியை தோற்கடித்து இது திராவிட மண் என மக்கள் காட்டியுள்ளனர்
அதே நேரத்தில் , சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து , அதிமுகதான் உண்மையான திராவிட இயக்கம் என்பதையும் நிரூபித்துள்ளனர்
அதிமுக மீதான அதிருப்தியாலும் பிளவு காரணமாகவும் எம் ஜி ஆர் விசுவாசிகள் பலர் வாக்களிக்கவில்லை
அப்படி இருந்தும் அதிமுக என்ற பெயருக்காகவே , திராவிட இயக்க பிதாமகன் எம் ஜி ஆரின் மரியாதைக்காகவே வாக்குகள் குவிந்துள்ளன
22 இடங்களில் நடந்த தேர்தலில் ஆட்சிக்கு தேவையான , 9 இடங்களில் அதிமுக வென்றுள்ளது
அது மட்டும் அல்ல.. தோற்ற 13 இடங்களில் நான்கில் திமுகவை விட அதிக வாக்குகள் அதிமுக பிரிவுகளுக்கு கிடைத்துள்ளன
ஆண்டிப்பட்டி
திமுக வெற்றி - 66 , 310 வாக்குகள்
அதிமுக + அமமுக - 84,518
திருப்பரங்குன்றம்
வென்ற திமுக - 85 ,376
அதிமுக + அமமுக - 1, 14,116
ஒட்டபிடாரம்
வென்ற திமுக - 73,241
அதிமுக + அமமுக - 82,812
பெரியகுளம்
வென்ற திமுக - 66,986
அதிமுக + அமமுக - 72,201
ஆக , 22ல் அதிமுக 13ல் முன்னணி பெற்று திராவிட இயக்கம் என்றால் அதிமுக என காட்டியுள்ளது
பலவீனமான தலைமை , அதிருப்தி , கட்சி பிளவால் பலர் வாக்களிக்க வராமை என்பதை எல்லாம் தாண்டி இத்தனை வாக்குகள் என்றால் , நீட் தேர்வு , ஈழ படுகொலை , ஸ்டெர்லைட் போன்றவற்றில் காங்கிரசின் துரோகத்தை சரியாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் ஆளுமை திறன் அதிமுகவில் இருந்திருந்தால் 22லுமே வென்று இருக்கும்
ஜெ இருந்திருந்தால் , 22 மட்டும் அல்லாது , பாராளுமனறத்திலும் தனித்து நின்று அனைத்தையும் வென்று இருப்பார் என்பதுதான் 2014 காட்டும் உண்மை
மக்கள் திராவிட இயக்கத்துக்கு ஆதரவான மன நிலையில் இருந்தாலும் அதை ஏற்கும் நிலையில் அதிமுக இப்போதைக்கு இல்லை என்பது வருந்தத்தக்கது
சோனியாவின் காலடியில் தமிழகத்தை வைக்க நினைப்பதை தடுக்கும் பொறுப்பு "திராவிட சிந்தனையாளர்களுக்கு உள்ளது
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]