சில அனுபவங்களை குறிப்பிட்ட காலத்தில் பெற்றால்தான் உண்டு.. இல்லையேல் நிரந்தரமாக அதை இழந்து விடுவோம்..
அப்படிப்பட்ட அனுபவங்களில் ஒன்றுதான் சிவாஜி எம் ஜி ஆர் படங்களை திரையரங்குகளில் அந்தந்த ரசிகர்கள் மத்தியில் பார்ப்பது
சின்னஞ்சிறு வயதில் இந்த படங்களை அப்படி பார்த்தது மங்கலாக நினைவில் இருக்கிறது
கல்லூரி கால கட்டத்தில் நிறைய படம் பார்த்தேன்... அப்போது ப்ழைய பட்ங்கள் மறு வெளியீடாக புத்தம் புதிய காப்பியாக திரையிடப்படும் சூழல் இருந்தது
இப்போதெல்லாம் புதிய படங்களுக்கே கூட்டம் வருவதில்லை.. அப்போது பழைய படங்களைக்கூட திரளாக ரசிப்பார்கள்
அப்படிப்பார்த்த படங்களில் ஒன்றுதான் தெய்வ மகன்... சிவாஜி நடிப்புக்கு முகபாவத்துக்கு ரசிகர்களின் கைதட்டலுடன் படம் பார்த்தது நல் அனுபவம்..
இனி அவ்வனுபவம் கிடைக்க வாய்ப்பில்லை.. பழைய படங்கள் திரையிடப்படுவது அரிது.. தாத்தா காலத்து சிவாஜி ரசிகர்களோ நம் மாமாக்கள் கால ரசிகர்களோ படம் பார்க்க வருவதும் அரிது
எனவே அரிய அனுபவமாகவே அப்படம் பார்த்த்தை கருதுகிறேன்
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா பாடலை வெகுவாக ரசித்தார்கள்.. நானும் ரசித்தேன்
தினத்தந்தியில் அப்பாடல் குறித்து கண்ணதாசன் மகனான அண்ணாதுரை கண்ணதாசன் எழுதியுள்ளார்
தாமரை உயரம் தண்ணீர் அளவு
உள்ளத்தளவே உலகளவு
காவிரி ஆறு கரைபுரண்டாலும்
காக்கைக்கு தேவை மூக்களவு”''
சின்னஞ்சிறு வயதில் இந்த படங்களை அப்படி பார்த்தது மங்கலாக நினைவில் இருக்கிறது
ReplyDeleteஉங்களுக்கு என்ன வயசு ?