ஆயிரம் ராமன்கள் வந்தாலும் ஒரு பரதனுக்கு ஈடாகாது என்கிறார் ராமர்..
லட்சுமணன் ராமர் கூடவே இருப்பவன்...
சரி.. அப்படி என்றால் சத்துருக்கனின் முக்கியத்துவம் என்ன?
வரம் கார்ணமாக ராமன் காட்டுக்கு செல்கிறான்.. பரதன் நாட்டை ஆள்கிறான்... சீதையை லட்சுமணன் , அனுமன் துணையால் மீட்டு மீண்டும் சக்கரவர்த்து ஆகிறான் ராமன்
இதில் சத்ருக்கணன் கேரக்டர் வரவே இல்லை என்றாலும் , பரதன் ஆட்சி செய்தல் , ராமன் மீண்டும் முடி சூடுதல் போன்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் சத்துருக்கனன் மூலமாகவே ந்டக்கிறது.. அனைத்தையும் செயல்படுத்துபவன் அவனே..
இது ஒரு புறம் இருந்தாலும் , ராமாயாணத்தை தத்துவ ரீதியாக அணுகும் ஆனந்த ராமாயணம் போன்றவற்றில் இதற்கு வேறு ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது
சுசுப்தி , சொப்னம் , ஜாக்ரத , துரியம் என நான்கு நிலைகளாக பிரஞ்ஞையை பகுத்துள்ளனர்
துரியம் என்பது முழு விழிப்பு நிலை... இதன் வெளிப்பாட்டு வடிவம்தான் ராமன்..
சுசுப்தி என்பது தான் என்ற உணர்வு உருவாகாத நிலை.. மனமற்ற நிலை... மனம் என்பது இல்லை என்பதால் துக்கமும் இல்லை.. அழிவும் இல்லை.. சாஸ்வத நிலை... இதன் வெளிப்பாடுதான் ஷத்ருக்கனன்
சொப்னம் என்பதில் பிரஞ்ஞை இருக்கும்.. ஆனால் நான் என்பது இருக்காது.. மரம் செடி கொடி விலங்குகள் எல்லாம் இந்த நிலைதான்,,,, நான் என்பது இல்லாமல் செயல்பட்ட பரதன் இந்த நிலையில் வருகிறான்
ஜாக்ரத என்பது விழிப்புணர்வு பெற்ற நிலை.. நன்மை தீமை குழப்பங்கள் உருவாகும் நிலை இது.. லட்சுமணன் இந்த நிலைதான்
ஜாக்ரத என்ற விழிப்புணர்வு மனிதனுக்கு அருளப்பட்டு இருந்தாலும் அதை மழுங்கடித்துக்கொள்ளத்தான் தினமும் அன்றாடம் பாடுபடுகிறோம்... பொழுது போக்குகள் , மது , ஸ்மார்ட் போன் என இதற்காக செலவழிக்கிறோம்...
சுசுப்தி என்ற நிலை நல்லதுதான்.. ஆனால் அதை நம்மால் ஈட்ட முடியாது.. என்னதான் முயன்றாலும் நாம் குழந்தையாக முடியாது.
ஆனால் துரியம் என்ற புத்த நிலையை நம்மால் அடைய முடியும்.. அதற்கு முயற்சி தேவை
நம் ஆழ் மனம் விரும்புவதும் இதைதான்... ஆனால் அதற்கான உழைப்பை கொடுக்க விரும்பாமல் சொப்ன நிலையை அடைய முனைகிறோம்...
இபப்டி தேவையின்றி நம் ஆற்றலை வீணடிப்பதற்கு பதில் விழிப்புணர்வை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதே ஆன்மிக நூல்கள் தரும் செய்தி
இப்பதிவே விழிப்புநிலை குறித்து மிகப்பெரும் விழிப்புணர்வை தந்தது.மிக்க நன்றி பிக்கு
ReplyDeleteநன்றிக்குறியவர்கள் முன்னோர்கள்தான்
Deleteசத்துருக்கன் சின்காவும் சத்துருக்கணும் ஒருவரா ?
ReplyDeleteஇல்லை ஆனாலும் வித்தியாசமானபெயர் அவருக்கு அனுகூலமாக அமைந்தது
Delete