Tuesday, May 21, 2019

பழைய எடைக்கற்கள் இனி செல்லாதா - அறிவியல் அலசல்


ஒரு கிலோ என்பதன் வரையறை மாறி விட்டது என சென்ற பதிவில் பார்த்தோம்.. அப்படி என்றால் இனி பழைய எடை கற்கள் செல்லாதா என்றால் அப்படி அல்ல..  பழைய எடைகள் மாறாது.. ஆனால் வரையறை மாறிவிட்டது


ஒரு கிலோ வெங்காயம் வாங்குகிறோம்.. அது ஒரு கிலோதான் என்பதை கடைக்காரரின் ஒரு கிலோ கல் மூலம் உறுதி செய்கிறோம்.. அவரது கல் ஒரு கிலோதானா என்பதை உறுதி செய்ய ஆய்வுச்சாலைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஒரு கிலோ கல்லுடன் ஒப்பிட்டு அறியலாம்..

கடையில் இருக்கும் எடை கல் காலப்போக்கில் எடை குறைந்து விடும் என்பதால் , அதை சோதிக்க ஆய்வுச்சாலைகளில் மாதிரி எடைக்கல் இருக்கும்..

ஆய்வுச்சாலைகளில் இருக்கும் எடைக்கல்லை சோதிக்க , அவற்றை விட இன்னும் பாதுகாப்பான் ஆய்வுச்சாலைகள் உண்டு. இவற்றுக்கெல்லாம் தலைமையகம் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ளது.. அங்கிருக்கும் கல் ஒரு கிலோ என எதைக்காட்டுகிறதோ அதுதான் உலகமெல்லாம் ஒரு கிலோ

இப்படித்தான் நூறு ஆண்டுகளுக்கும் மேல் இருந்தது

ஆனால் அந்த கல் திருடப்பட்டால் ,.அல்லது எடை குறைந்தால் , கூடினால் என்ன ஆவது?

எனவே பழைய முறையை மாற்றி , இனி பிளாங்க் மாறிலியை அடிப்படையாக கொண்டு எடையை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளனர்


இதன் மதிப்பு 6.626 069… × 10–34    
 அலகு ஜூல்ஸ் செகண்ட்

இதன் மதிப்பு எடை , மீட்டர் மற்றும் நொடி ஆகியவற்றை சார்ந்தது


மீட்டர் என்பதை ஒளி குறிப்பிட்ட நேரத்தில் கடக்கும் தூரம் என துல்லியமான வரையறை செய்துள்ளார்கள்


ஒரு நொடி என்பதை சீசியம் அணுவை வைத்து அணு கடிகாரத்தை பொறுத்து துல்லியமாக வரையறுது விட்டனர்


மீட்டர் தெரியும்..  நொடி தெரியும்... பிளாங்க் மாறிலியும் தெரியும்.. எனவே மிச்சம் இருக்கும் எடையை சுலபமாக கண்டு பிடிக்கலாம்


மீட்டரோ , நொடியோ மாறப்போவதில்லை என்பதால் , கிலோ என்பதும் என்றைக்கும் மாறபோவதில்லை.. ஒவ்வொரு முறையும் ஃபிரான்சுக்கு சென்று சோதிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதே புதிய வரை முறையின் அனுகூலம்



2 comments:

  1. எலெக்ட்ரோனிக் வோட்டிங் மெஷின் கண்டுபிடிச்சதுக்கு சுஜாதாவுக்கு சம்மந்தமில்லை என்று பதிவு படிச்சேன் அது உண்மையா ?

    ஆனால் விக்கியில் சுஜாதா கண்காணிப்பு உண்டு என்று உள்ளது . எது உண்மை ?

    அத்துடன் சுஜாதாவுக்கு விருது கொடுத்தது மத்திய அரசு கூட இல்லை

    இதை தனி பதிவாக எழுதுங்கள்

    http://www.nambalki.com/2019/05/blog-post_22.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+nambalki%2FUDdT+%28%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%29

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா